'மோடி தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு முதன்மையான தலைவர், உண்மையான நண்பர்'- கிரேக்க பிரதமர் புகழாரம்!
மோடி ஒரு முதன்மையான தலைவர் என்றும் தொலைநோக்கு பார்வையுடைய ஆற்றல் கொண்ட தலைவர் என்றும் உண்மையான நண்பர் என்றும் கிரேக்க பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
By : Karthiga
டெல்லி வந்த கிரீஸ் பிரதமர் கிரையகோஸ் மிசோடா கிஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கிரீஸ் பிரதமர் கிரயகோஸ் மிசோடா கிஸ் இரு நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்திருந்தார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி வந்தடைந்த கிரீஸ் பிரதமர் தனது மனைவியுடன் ராஜ்காட் சென்றார். அங்க மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கிரீஸ் பிரதமர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் தரப்பு விவாதங்களில் பங்கேற்றனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது .தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஒன்பதாவது ரெய்சினா பேச்சுவார்த்தையில் கிரீஸ் பிரதமர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி சார்பில் விருந்தினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது .இதன் பின்னர் கிரேக்க பிரதமர் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் கிரேக்க பிரதமர் பேசும்போது பிரதமர் மோடியிடம் நான் தொலைநோக்கு பார்வை, ஒரு முதன்மையான தலைவர் மற்றும் உண்மையான நண்பர் ஆகிய விஷயங்களை கண்டிருக்கிறேன்.
இந்தியாவுடன் நம்முடைய உறவில் நாம் பிணைந்து இருப்பதன் முக்கியத்துவம் நிரூபணம் ஆகியுள்ளது. அது கடந்த ஆண்டில் நம்முடைய இருதரப்பு தொடர்புகளின் அதிகரிப்பு என்று இல்லாமல் நாம் வளர்த்துள்ள நட்புறவுகளிலும் உள்ளது என்று கூறியுள்ளார். பல அம்சங்களில் இந்தியாவும் கிரேக்கமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி காணப்படுகிறது. நம்முடைய பகிரப்பட்ட மதிப்புகள் நம்மை நெருங்கிக் கொண்டு வர செய்யும் பாலமாக பணியாற்றுகிறது. உலகின் மிகப் பழமையான ஜனநாயகம் உலகின் பெரிய ஜனநாயகம் ஆகியவை ஒருவருடன் ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான பரஸ்பர அரசியல் மன உறுதியை பகிர்ந்து கொள்கின்றன. கடந்த ஆண்டு வேளாண்மை மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டோம் .இந்த ஆண்டின் புலம்பெயர்தல் மற்றும் இயக்கம் சார்ந்த விஷயங்களில் முக்கிய ஒப்பந்தம் ஒன்று விரைவில் உறுதி செய்யப்படும் என்றார்.
SOURCE :Dinaboomi