டிரம்ப் கூறியதைப் போல மோடி இந்தியாவின் தேசத் தந்தைதான்!! ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்தியர்களே இல்லை!!மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!!
டிரம்ப் கூறியதைப் போல மோடி இந்தியாவின் தேசத் தந்தைதான்!! ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்தியர்களே இல்லை!!மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!!
By : Kathir Webdesk
பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத் தந்தை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்தியர்களே கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார் .
செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்தியாவுக்கு உலக அரங்கில் மதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறினார்.
பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத் தந்தை என்று டிரம்ப் கூறியதை எண்ணி, உலக நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்கள் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.
முந்தைய அமெரிக்க அதிபர் யாரும், இந்தியப் பிரதமர் ஒருவரை இது போல் சொல்லிக் கேட்டதில்லை என்று குறிப்பிட்ட ஜிதேந்திர சிங், அரசியல் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து ஒவ்வொரு இந்தியனும் இதை எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.
அதேவேளையில், மோடியை தேசத் தந்தை என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், தங்களை இந்தியர்களாக நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் ஜிதேந்திரசிங் சாடியுள்ளார்.
https://www.polimernews.com/dnews/81910/