பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா,சீனா அதிபர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா,சீனா அதிபர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
By : Kathir Webdesk
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பிரேசில் சென்றடைந்தார்,அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய, பெரிய பொருளாதார நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ் ' என்ற அமைப்பை உருவாகியது, நா.இந்த அமைப்பின், 11வது கூட்டம், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது,
உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளன, கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளன. உலக பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகள் 50 சதவீத பங்களிப்பு செய்துள்ளன.
பிரேசிலுக்கு சுற்றுலா அல்லது தொழில் துவங்க வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.
இந்த மாநாட்டின்போது பிரேசில், ரஷ்யா ,சீனா அதிபர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.