Kathir News
Begin typing your search above and press return to search.

'கேலோ இந்தியா' ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்த மோடி: சொந்த ஊருக்கு வந்தது போல் உள்ளது -பிரதமர் மோடி நெகழ்ச்சி!

ஆறாவது 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கேலோ இந்தியா ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்த மோடி: சொந்த ஊருக்கு வந்தது போல் உள்ளது -பிரதமர் மோடி நெகழ்ச்சி!

KarthigaBy : Karthiga

  |  21 Jan 2024 12:47 AM GMT

18 வயதுக்கு உட்பட்டோருக்கான 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் வருகிற 31ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியில் 26 வகையான போட்டிகள் இடம் பெறுகின்றன. இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 5,630 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


விழாவுக்கு கவர்னர்.ஆர்.என் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை அடுத்து கேலோ இந்தியா போட்டிக்கான ஜோடதியை டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகள வீராங்கனை சுபா ஆகியோர் கொண்டு வந்து பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர். ஜோதியை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அதை ஏற்றி வைத்து போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். அந்த ஜோதி தமிழ் எழுத்தான 'த' வடிவில் இருந்தது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார் .


அப்போது அவர் "தமிழ்நாட்டுக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்தது போல் இருக்கிறது .விளையாட்டு துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் சக்தியாக நாட்டில் உள்ள இளைஞர்கள் விளங்குகின்றனர். 'ஒரே பாரதம் வலிமையான பாரதம்' என்பதை போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் காட்டுகின்றனர் .2014 ஆம் ஆண்டுக்கு பிறகு விளையாட்டு துறை மேம்பாடு அடைந்துள்ளது. திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்தது. பாரா ஒலிம்பிக்கிலும் பெரும் சாதனை படைத்தது.இந்திய விளையாட்டு துறையின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடுகிறோம்.விளையாட்டு துறையில் இந்தியா தலைசிறந்த நாடாக உயர விரும்புகிறோம்.2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.தமிழ்நாட்டில் சிறப்பு வாய்ந்த விளையாட்டுகளில் சிலம்பம் ஒன்று .அது 'கேலோ இந்தியா' போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது" என்றார்.


அதனைத் தொடர்ந்து கேலோ இந்தியா போட்டிக்கான 'தீம்பாடல்' இந்தியில் திரையிடப்பட்டது. தொடர்ந்து அதே பாடல் தமிழில் நடனமாடி இசையமைத்து பாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகளும் பங்கேற்று நடனம் ஆடினர். பின்னர் தமிழ்நாட்டில் வீர தீர கலைகளான யோகா, மல்லர் கம்பம், வில்வித்தை, களரி, சிலம்பத்துடன் நடைபெற்று கண்கவர் நடன நிகழ்ச்சி காண்போரை பரவசப்படுத்தியது. அத்துடன் விழா நிறைவடைந்தது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News