Kathir News
Begin typing your search above and press return to search.

மாமல்லபுரத்தில் நாளை சீன அதிபருடன் மோடி பேசப்போகும் முக்கியப் பிரச்சினை இதுதான்! இதன் மூலம் தமிழக பிரிவினைவாதிகளுக்கும் சவுக்கடி!!

மாமல்லபுரத்தில் நாளை சீன அதிபருடன் மோடி பேசப்போகும் முக்கியப் பிரச்சினை இதுதான்! இதன் மூலம் தமிழக பிரிவினைவாதிகளுக்கும் சவுக்கடி!!

மாமல்லபுரத்தில் நாளை சீன அதிபருடன் மோடி பேசப்போகும் முக்கியப் பிரச்சினை இதுதான்! இதன் மூலம் தமிழக பிரிவினைவாதிகளுக்கும் சவுக்கடி!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Oct 2019 2:28 PM IST



காஷ்மீர் விவகாரம் உட்பட தனது உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது என்று இந்தியா ஏற்கனவே தனது நிலையை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.


காஷ்மீர் விவகாரத்தைத் தாம் மிகவும் நெருங்கிய நிலையில் கண்காணிப்பதாக சீன அதிபர் ஸி ஜின்பிங், பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்த சில மணி நேரத்தில் இந்தியா இவ்வாறு சில வாரங்களுக்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.


சீனா இந்தியாவின் மிகப்பெரிய பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 2017-2018 நிதியாண்டில் இரு நாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 89.71 பில்லியன் டாலரை எட்டியது. சீனாவின் இலாபகரமான விற்பனை முழுக்க இந்தியாவை நம்பியுள்ளது. ஆயினும், தொடர்ந்து அந்நாடுகளின் எல்லைப்பகுதியில் நீடித்துவரும் சர்ச்சையால், குறிப்பாக டோக்லாம் வட்டாரத்தில் ஏற்படும் மோதலால், இந்திய-சீன உறவு அவ்வப்போது பாதிக்கப்படுகிறது.


இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் முக்கிய அங்கம் என்றும் அது தற்போது மற்ற மாநிலங்களைப் போல இந்திய இறையாண்மைக்குள் உட்பட்டிருக்கிறது என்றும் சமீபத்தில் வெளியுறவு அமாவ்ச்சகத்தின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருக்கிறார். “எங்கள் நிலைப்பாடு சீனாவுக்குத் தெரியும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி கருத்துரைப்பது மற்ற நாடுகளுக்குத் தகாது,” எனறு அவர் கூறினார்.


ஜம்மு-காஷ்மீரில் தற்போது பல்வேறு அட்டூழியங்கள் நடப்பதாகக் குற்றம் சாட்டும் பாகிஸ்தானுக்கு சீனா குரல் கொடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இதனைப் பற்றி பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு அனைத்துலகக் கூட்டங்களில் உரையாற்றி தனது நாட்டுக்காக ஆதரவு திரட்ட முயல்கிறார். சீனா மட்டும் காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.


இது ஏன் என்றால் ஜம்மு-காஷ்மீரில் உள்ளடங்கும் லடாக்கின் சில பகுதிகள் மீது சீனா ஏற்கனவே இந்தியாவிடம் உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினையுடன் சில வர்த்தகப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டால் சீனா ஒரு போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீர் விவகாரத்தில் தலையிடாது. எனவே காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவை பெறவே நாளை இரு நாடுகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.


லடாக் விஷயம் தொடர்பான இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு ஓட்ட வால் நறுக்கப்படும். அதே சமயத்தில் இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் அவ்வப்போது தலை தூக்கும் பிரிவினைவாத குரல்களுக்கும் உலக அரங்கில் எந்த ஆதரவும் இல்லை என்பதை தெளிவு படுத்தவே மாமல்லபுரத்தில் இந்த நிகழ்ச்சியை மிக சாமர்த்தியமாக இந்திய அரசு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,. ஏனென்றால் அமெரிக்கா உட்பட மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவின் நிலையை அங்கீகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News