டெல்லியில் நடந்த 'வீர்பால் திவாஸ்' நிகழ்ச்சியில் இளைஞர் நலனுக்காக மோடியின் அறிவுரை!
உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளியுங்கள். போதை பழக்கத்தை கைவிட வேண்டும். இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.

By : Karthiga
சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் உயிர் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 26 - ஆம் தேதி 'வீர்பால் திவாஸ்' என்ற தினம் அனுசரிக்கப்படுகிறது. இதயொட்டி நேற்று டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 'வீர்பால் திவாஸ்' நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் .அங்கு அவர் பேசியதாவது:-
சீக்கிய குரு கோவிந்த்சிங்கின் மகன்கள் உயிர் தியாகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது .சீக்கிய குருக்கள் தங்கள் நாட்டின் பெருமைக்காக வாழ்வது பற்றி இந்தியர்களுக்கு கற்றுத்தந்தனர். நாட்டை சிறப்பானதாகவும் வளர்ந்த நாடாகவும் மாற்றுவதற்கு உந்து சக்தியாக திகழ்ந்தனர் .
இளைஞர்கள் எந்த பிராந்தியத்தில் சமூகத்தில் பிறந்திருந்தாலும் அவர்களின் அளவற்ற கனவுகளை நினைவாக்க மத்திய அரசு தெளிவான கொள்கைகளை வைத்துள்ளது .மத்திய அரசின் நோக்கத்தில் எந்த தவறும் இல்லை .இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் .
அவர்கள் பிட்டாக இருந்தால் தங்கள் வாழ்க்கையிலும் பணிகளிலும் சூப்பர் ஹிட் ஆக இருக்கலாம். இளைஞர்கள் நல்ல உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். போதை பழக்கத்தை கைவிட வேண்டும். போதை பழக்கத்திற்கு எதிராக மதத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் இயக்கம் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI
