தேசிய விருதுகள் மூலம் மோடியை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கிடைத்துள்ளது - குஷ்பு
'பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என இடதுசாரிகளின் கருத்துக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர்' என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
'பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என இடதுசாரிகளின் கருத்துக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர்' என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நேற்று 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டன இதில் தமிழ் சினிமாவிற்கு 10 விருதுகள் கிடைத்தன, அதில் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் சூரியா எப்போது மத்திய அரசை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு விருது கிடைக்காது என்ற கருத்துக்களை பல தரப்பிலும் பலரும் பேசி வந்த நிலையில் தற்போது விருது அறிவிக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இதை குறிப்பிட்டு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளதாவது, 'பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் தேசிய விருது கிடைக்கும் என்ற இடத்துசாரிகளின் கருத்துக்கு இன்றைய தேசிய விருது வழங்கும் விழா ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளது. தகுதியானவர்கள் மட்டுமே இங்கு பாராட்டப்படுகிறார்கள்' என நடிகை குஷ்பு இது குறித்து தெளிவுபடுத்தி உள்ளார்.