Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: சத்தத்தால் நிறுத்தப்பட்ட மோகினியாட்டம், மாவட்ட நீதிபதி உத்தரவு!

"மோகினி ஆட்டம் சத்தத்தின் காரணமாக நிறுத்த வேண்டும்" என்ற மாவட்ட நீதிபதி கலாம் பாஷா அவர்கள் உத்தரவு ஏன்?

கேரளா: சத்தத்தால் நிறுத்தப்பட்ட மோகினியாட்டம், மாவட்ட நீதிபதி உத்தரவு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 March 2022 1:44 AM GMT

கேரளாவின் பாலக்காட்டில் அவரது நிகழ்ச்சி சனிக்கிழமை திட்டமிடப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்டம் கலைஞர், நீனா பிரசாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் நிகழ்ச்சியை பாதியில், உள்ளூர் மாவட்ட நீதிபதியின் புகாரைத் தொடர்ந்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்ததால், போலீசார் அவர்களை மேடையில் இருந்து வெளியேற்றியபோது அவரது குழுவினர் கண்ணீர் விட்டு அழுததாக மோகினியாட்டம் கலைஞர் பிரசாத் கூறுகிறார். பாலக்காடு நகரில் உள்ள அரசு நடத்தும் மோயன் கீழ்நிலைப் பள்ளியில் அவரது நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு திட்டமிடப்பட்டதாக அவரது தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இது தொடங்கிய சில நிமிடங்களில், மாவட்ட நீதிபதி கலாம் பாஷாவின் உத்தரவின்படி செயல்படுவதாகக் கூறி, குழுவினரை நிறுத்துமாறு போலீசார் கூறினர்.


குறிப்பாக நீதிபதி பள்ளிக்கு அருகில் தங்கியிருப்பதாகவும், அந்த "சத்தம்" தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும் காவல்துறையிடம் கூறினார். இதனால் அவர் உத்தரவு பிறப்பித்து தாகவும் இதிலிருந்து கூறப்படுகிறது. 'சக்யம்' என்று தலைப்பிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே உள்ள அழுத்தங்களை சித்தரிப்பதாக இருந்தது. இது ஒரு மணி நேரம் திட்டமிடப்பட்டது. இதுபற்றி மோகினியாட்டம் கலைஞர் கூறுகையில், எனது குழுவில் கேரளாவின் பல பகுதிகளில் வாழும் இசைக் கலைஞர்கள் உள்ளனர். தொழில்முறை நடனக்கலைஞர்கள் என்பது நிகழ்ச்சிக்காக மிகவும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் பல நாட்கள் பயிற்சி செய்து, அவர்களுக்கான ஒத்திகைகளைப் பார்த்து நிகழ்ச்சிக்கு தயாராகி நடத்தும் பொழுது இப்படி ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும்" கூறினார்.


"நீதி மற்றும் சட்ட அமலாக்கத்தை உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் கடமைகளுடன் அவர்கள் செய்யும் வேலையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். இதுபோன்ற நியாயமற்ற மற்றும் சட்டவிரோத தனிப்பட்ட விருப்பங்களைக் கருத்தில் கொண்டு கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமா? அல்லது கலாசார நடவடிக்கைகள் கூட நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் உத்தரவுகளின்படி செய்யப்பட வேண்டுமா? இன்று கேள்வியை இது எழுப்புகிறது. ஆங்கில நாளிதழான தி ஹிந்து, புரோகமன கலா சாகித்ய சங்கம் போன்ற பல கலாச்சாரக் குழுக்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Swarajya News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News