பணம் அச்சிடும் பணி நிறுத்தம், திடீரென்று அறிவித்த பிரதமர்!
By : Thangavelu
இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி பிரச்சனையை தீர்ப்பதற்காக பணம் அச்சிடும் நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று அடுத்த ஆண்டு முற்பகுதியில் பணம் அச்சிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், குறித்த காலக்கட்டத்தில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் உதவிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டாலும் அது தற்காலிகமானதாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டின் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை தலைவர்கள் உள்ளனர். அதன்படி பொருளாதார சிக்கல்களை அடுத்த ஆண்டு முற்பகுதியில் தீர்ப்பதற்கு இலங்கை பிரதமர் முயற்சிப்பதாக அவரது அறிவிப்பின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. வருகின்ற ஆறு மாத காலம் என்பது இலங்கைக்கு மிக, மிக முக்கியமான காலக்கட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை மக்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Source, Image Courtesy: Abp