Kathir News
Begin typing your search above and press return to search.

சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்

சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்

சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Sep 2019 7:33 PM GMT


மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூரைச் சேர்ந்த விஜின் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மெர்லின் திவ்யாவை பிரசவத்திற்காக மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். நேற்று காலை மெர்லின் திவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை மருத்துவர்கள் பிரசவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கடந்ததும், மெர்லின் திவ்யாவையும், பிறந்து சில நிமிடமே ஆன சிசுவையும் யாரிடமும் சொல்லாமல் அவசர ஊர்தியில் மருத்துவர்கள் அனுப்பி வைத்ததைப் பார்த்த உறவினர்கள், எங்கே கொண்டுசெல்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். உயர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறி, அவசரமாக ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றுள்ளனர்.




https://twitter.com/polimernews/status/1169223792981266433?s=19


உறவினர்கள் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை அரசு மனைத்துவமனையில் ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. ஆம்புலன்ஸில் இருந்து மெர்லின் திவ்யாவையும் குழந்தையையும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.




https://twitter.com/vikatan/status/1169282143689826304?s=19


அரசு மருத்துவமனையில், தாயையும் சேயையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் தாயும் சேயும் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.




https://youtu.be/dP6_Rlx_LYo


மனைவியும், குழந்தையும் உயிரிழந்த துக்கம் தாளாமல் விஜின் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விஜினுக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News