Kathir News
Begin typing your search above and press return to search.

'அன்னை' தெரசா: 'சமூக சேவை' எனும் பெயரில் நடந்த மத வியாபாரமும், துன்பம் நிறைந்த இருண்ட யதார்த்தமும்.!

'அன்னை' தெரசா: 'சமூக சேவை' எனும் பெயரில் நடந்த மத வியாபாரமும், துன்பம் நிறைந்த இருண்ட யதார்த்தமும்.!

அன்னை தெரசா: சமூக சேவை எனும் பெயரில் நடந்த மத வியாபாரமும், துன்பம் நிறைந்த இருண்ட யதார்த்தமும்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Sept 2020 7:59 AM IST

இந்தியாவில் பெரும்பாலும் ஒரு 'துறவி', 'ஏழைகளின் கடவுள் தூதுவர்' என்று அழைக்கப்படும் 'அன்னை' தெரசா, சாகும் தருவாயில் இருப்பவர்களை மதம் மாற்றுவதில் தொடங்கி, நோயாளிகளை ஒருவருக்கொருவர் எதிராக கழிவறை பயன்படுத்த வைத்தது வரை பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் மூழ்கி இருக்கிறார். ஸ்கோப்ஜேயில் (பின்னர் ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக) பிறந்த அல்பேனிய கன்னியாஸ்திரியான அவர் கிறிஸ்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க பிரிவைப் பின்பற்றினார். ஒட்டோமான் பேரரசில் வாழ்ந்த சில வருடங்களுக்குப் பிறகு, அவர் அயர்லாந்திற்கும் கடைசியாக இந்தியாவுக்கும் வந்தடைந்தார்.

இந்தியாவில், "சமூக சேவை" என்ற காரணத்தைக் காட்டி மக்களை பலவந்தமாக மதம் மாற்றுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்ட 'மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி' என்ற அரசு சாரா அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவில் அவருக்கென்று ஒரு கும்பலே (cult) பின்பற்ற இருந்தாலும், வாடிகனால் நேரடியாக ஆதரிக்கப்பட்ட போதிலும், ஹஃபிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரசா நடத்திய "மருத்துவமனைகள்" மற்றும் "அனாதை இல்லங்கள்" ஆகியவற்றின் பரிதாபகரமான நிலைமைகளைக் கண்டபோது அவர்களின் அருவருப்பை அடக்க முடியவில்லை.

'அன்னை' யை விமர்சித்ததற்காக பல வருடங்கள் பயந்து வாழ்ந்த பின்னர், டாக்டர் அரூப் சாட்டர்ஜி இறுதியாக தி நியூயார்க் டைம்ஸுக்கு மிஷனரிகளால் நடத்தப்படும் இந்த "மருத்துவமனைகளின்" அருவருப்பான யதார்த்தத்தைப் பற்றிப் பேசினார். டாக்டர் சாட்டர்ஜி கருத்துப்படி, மிஷனரிகளால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் 'துன்பத்தை வழிபடுவதை(cult of suffering)' கண்டார். மிஷனரிகளால் படுக்கையில் கட்டப்பட்டதால் குழந்தைகள் வேதனையுடன் அலறுவதைக் கண்டார், மேலும் வலியைக் குறைக்க ஆஸ்பிரின் தவிர வேறு எந்த நிவாரணமும் வழங்கப்படாததால் இறக்கும் நோயாளிகள் வலி தாங்காமல் கதறுவதையும் கண்டார்.

கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் மிகவும் பழமையான மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன, அவர்கள் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயாளிகளைப் பராமரிப்பதாகக் கூறினாலும், நோயாளிகளுக்கு "எளிமை" என்ற பெயரில் மீண்டும் பயன்படுத்தப்பட்ட ஹைப்போடர்மிக் ஊசிகளைப் பயன்படுத்தினர். தி டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் அவர் விவரிக்கும் மற்றொரு நிகழ்வு, மருத்துவமனைகளில் வழங்கப்படும் பழமையான வசதிகள் காரணமாக நோயாளிகள் ஒருவருக்கொருவர் எதிரே மலம் கழிக்கும்படி செய்யப்பட்டதாகக் கூறுகிறது. 10-20 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன, மேலும் மலம் படிந்த போர்வைகள், உணவுகள் மற்றும் பாத்திரங்கள் கழுவும் அதே இடத்தில் கழுவப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் "மருத்துவமனைகளின்" நிலை இதுதான்.

ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் 2013 ஆய்வில் ஹஃப் போஸ்ட் 'அன்னை' தெரசா பற்றிய கட்டுரையில் இது மேற்கோள் காட்டப்பட்டது. அவரது 'தாராள மனப்பான்மை' பற்றிய கூற்றுக்கள் அனைத்தும் கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பிரச்சாரத்தைத் தவிர வேறில்லை என்று ஆய்வு கூறுகிறது.

"அவர் இறக்கும் போது 100 நாடுகளில் 517 மிஷன்கள் இருந்தபோதிலும், மருத்துவ உதவியை நாடுகின்ற எவரும் அந்த உதவி அங்கே கிடைக்கவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற, தகுதியற்ற நிலைமைகள், போதிய உணவு, மற்றும் வலி நிவாரணி மருந்துகள் இல்லை என்பதை மருத்துவர்கள் கவனித்தனர் - இது நிதி பற்றாக்குறையால் அல்ல, அது நிறையவே இருந்தது. தெரசாவின் 'துன்பம் மற்றும் இறப்பு பற்றிய குறிப்பிட்ட கருத்து' காரணமாகவே இது நடந்து என்று கூறுகின்றனர்.

கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸிடம் ஒரு முறை பேட்டியளித்த தெரசா- "ஏழைகள் தங்களின் துன்பத்தை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது அழகாக இருக்கிறது, அதை கிறிஸ்துவின் பேரார்வம் போல அனுபவிக்க வேண்டும். அவர்களின் துன்பத்திலிருந்து உலகம் அதிகம் பெறுகிறது". ஏழைகள் துன்பப்படுவதைப் பார்த்ததிலிருந்து அவர் பெற்ற சாடிஸ்டிக் இன்பங்களை இது காட்டுகிறது.

தெரேசாவின் துன்பகரமான வரலாறு இங்கே முடிவடையாது, மிஷனரிகளால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் இறக்கும் நோயாளிகள் இறப்பதற்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த கூற்றை ஆதரிக்க, வாஷிங்டன் போஸ்ட் லியோ மாஸ்பர்க்கின் 'மதர் தெரசா ஆஃப் கல்கத்தா: ஒரு தனிப்பட்ட (portrait)' புத்தகத்தை மேற்கோள் காட்டியது.

1994 ஆம் ஆண்டில், கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் மற்றும் பத்திரிகையாளர் தாரிக் அலி ஆகியோர் 'ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டனர், இது தெரசாவின் அமைப்புகளின் அருவருப்பான யதார்த்தத்தை பொதுமக்கள் முன் கொண்டு வந்தது.

தெரசா தொண்டு நிறுவனம் எனும் பெயரில் ஒரு வியாபாரத்தை மேற்கொண்டார், அவரது மரணத்திற்குப் பிறகும் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி பல முறை பொது ஆய்வுக்கு உட்பட்டது, மிகச் சமீபத்தியது 2018 ஆம் ஆண்டில் சட்ட அமலாக்க நிறுவனங்களால் அம்பலப்படுத்தப்பட்ட ஒரு மனித கடத்தல் ஊழல்.

2018 ஆம் ஆண்டில், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் ஜார்க்கண்டின் ராஞ்சியில் இயங்கும் ஒரு அனாதை இல்லம் பிறந்து 14 நாள் குழந்தையை விற்றது. குழந்தைகள் நலக் குழுவின் தலையீட்டின் பின்னர் ஜார்கண்ட் காவல்துறையால் மையத்தின் 2 பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மையத்திலிருந்து ரூபாய் 401,40,000 தொகை மீட்கப்பட்டது.

தெரசாவை ஏழைகளின் கடவுளாக சித்தரிக்க எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, பல முயற்சிகள் இருந்தபோதிலும், அவரின் பெரும்பாலான முயற்சிகளுக்குப் பின்னால் இருண்ட யதார்த்தம் இருக்கிறது ஒரு சமூக சேவை சார்ந்த அமைப்பு 'மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி' என்பது ஒரு 'செம்மறி ஆடையில் ஓநாய்' என்பதற்கு குறைவானதல்ல. இந்த அமைப்பு அவர்களின் மதத்திற்குள் ஏழைகளை விழுங்கியது மற்றும் பழமையான மருத்துவ நடைமுறைகளால் அவர்களின் கண்ணியத்தை பறித்தது.

Translated From: Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News