Kathir News
Begin typing your search above and press return to search.

பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்த நியூசிலாந்து எம்.பி.!

நியூசிலாந்தில் ஜூலி அன்னே ஜெண்டர் 41, இவர் அந்நாட்டு எம்.பி.யாக உள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்த நியூசிலாந்து எம்.பி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Nov 2021 3:38 AM GMT

நியூசிலாந்தில் ஜூலி அன்னே ஜெண்டர் 41, இவர் அந்நாட்டு எம்.பி.யாக உள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை (நவம்பர் 28) ஜூலி அன்னேக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது வீட்டில் இருந்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சைக்கிள் மூலமாக சென்று சேர்ந்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மருத்துவமனையில் சேர்ந்த 10 நிமிடங்களிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் பற்றி ஜூலி அன்னே எம்.பி., தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று முக்கியமான செய்தி, அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். எனக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது சைக்கிள் ஓட்டுவதற்கு நான் திட்டமிடவில்லை. ஆனாலும் ஆச்சரியப்படுகின்ற வகையில் எங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது என்றார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Republic World


Next Story
கதிர் தொகுப்பு
Trending News