தொழில்முனைவோருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - எவ்வித பிணையமுமின்றி 10 இலட்சம் வரை கடன் - எளிமையாக்கப்படும் வெற்றிகர திட்டம்.!
தொழில்முனைவோருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - எவ்வித பிணையமுமின்றி 10 இலட்சம் வரை கடன் - எளிமையாக்கப்படும் வெற்றிகர திட்டம்.!
By : Kathir Webdesk
இந்தியாவில் பெரு தொழில்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் மிக எளிதில் வங்கிகளிடமிருந்து நிதி கிடைத்துவிடும். மரபுசாரா சிறு தொழில்களுக்கு நிதி கிடப்பது மிகவும் கடினம். இந்தியாவின் தொழில்முனையும் சூழலை முற்றிலும் மாற்றியமைக்க மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு முத்ரா கடன் திட்டம் அறிமுக படுத்தப்பட்டது. இதுவரை 12 கோடி சிறு தொழில்முனைவோருக்கு 5.28 லட்ச கோடி ரூபாய் முத்ரா கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 9 கோடி பெண் தொழில்முனைவோர் என்பது மிக மிக ஆரோக்கியமான விஷயம். அதாவது, 75% கடன் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
2015-2016 ஆம் ஆண்டில் 3.49 கோடி பயனாளிகள், 2016-2017 ஆம் ஆண்டு 3.97 கோடி பயனாளிகள், 2017-2018 ஆம் ஆண்டில் 4.54 கோடி பயனாளிகள் என்று கடந்த இரண்டு வருடங்களில் 30% வளர்ச்சி அடைந்துள்ளது. கடன் பெரும் ஒவ்வொரு பயனாளியால் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கபட்டுள்ளது.தனிநபர் வருமானத்தில் பின் தங்கிய மாநிலங்களான உத்தர பிரேதேசம், மத்திய பிரேதேசம், பீகார், ஒரிசா, ராஜஸ்தான், அசாம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் அதிக கடன் பெறுவதில் முதல் 15 இடங்களில் இருப்பது ஆரோக்கிமானது. தனி நபர் வருமானத்தில் மிகவும் பின் தங்கிய பீகார் மாநிலத்தில் 1 கோடி முத்ரா பயனாளிகள், அதிக கடன் பெற்றதில் 5 வது இடம். உத்தர பிரேதசத்திலும் 1 கோடி முத்ரா பயனாளிகள் உள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் நல்ல பயன் பெற்றுள்ளன. இந்தியாவின் மக்கள் தொகையில் 48.53% பெண்கள் உள்ளனர். ஆனால் முத்ரா மூலம் பயனடைந்தவர்கள் 76% பெண்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தோர் 16.63%, முத்ரா கடன் பெற்றது 17.77%. 39% முத்ரா பயனாளிகள் சிறுபான்மையினர்.
SKOCH நிறுவனத்தின் ஆய்வின்படி முத்ரா கடன்களின் மூலம் 5.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில் முனைவதிலும், வேலை வாய்ப்புகள் உருவாக்குவதிலும் மிக பெரிய தாக்கத்தை முத்ரா திட்டம் ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. 3.77 கோடி நேரடி வேலைவாய்ப்புகளும், 1.67 மறைமுக வேலைவாய்ப்புகளும், 2.67 கோடி பிற்படுத்தபட்ட பிரிவினருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளதை தொடர்ந்து, முத்ரா கடன் திட்டத்தை இன்னும் எளிமையாக்கி அதிகமானோரை கடன்பெற வைப்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.