Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நாளில் 1032 விமானங்களை இயக்கி மும்பை விமான நிலையம் சாதனை!

மும்பை விமான நிலையம் ஒரே நாளில் 1032 விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.

ஒரே நாளில் 1032 விமானங்களை இயக்கி மும்பை விமான நிலையம் சாதனை!

KarthigaBy : Karthiga

  |  17 Nov 2023 11:57 AM GMT

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் நாட்டின் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆன இங்கிருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி விடுமுறையை ஒட்டி கடந்த ஒரு வாரமாக மும்பை விமான நிலையத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த பதினோராம் தேததியில் இருந்து 13-ம் தேதி வரை மும்பை விமான நிலையத்தில் இருந்து 2984 விமான சேவைகள் இயக்கப்பட்டு உள்ளன.


இதில் 2137 உள்நாட்டு விமானங்கள் 757 வெளிநாட்டு விமானங்கள். தீபாவளி விடுமுறையின் போது மும்பை விமான நிலையத்தில் இருந்து 5 லட்சத்து 16 ஆயிரத்து 562 பயணிகள் சென்றுள்ளனர். இதில் கடந்த 11ஆம் தேதி மட்டும் மும்பை விமான நிலையத்தில் 1032 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் மும்பை விமான நிலையத்தில் கையாளப்பட்ட அதிக விமான சேவை இதுவாகும். இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து ஒரே நாளில் 1004 விமான சேவைகள் இயக்கப்பட்டு இருந்தது. அந்த சாதனையை தற்போது மும்பை விமான நிலையம் முறியடித்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News