Kathir News
Begin typing your search above and press return to search.

சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியாவின் நிதி தலைநகரம் மும்பை!

2024 - ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அறியப்படும் மும்பை இடம் பிடித்துள்ளது.

சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியாவின் நிதி தலைநகரம் மும்பை!

KarthigaBy : Karthiga

  |  11 Feb 2024 3:45 PM GMT

நகர்ப்புற வாழ்வியலின் கட்டமைப்புகள், பொழுதுபோக்கு மையங்கள், கலாச்சாரங்கள், பசுமையான இடங்கள், மலிவு விலை உணவுகள் உட்பட பல்வேறு அம்சங்கள் நகரங்களின் வாழ்வியல் நிலைமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிடித்துள்ளது. அதன் கலாச்சாரம் பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகள் அங்கு வகிக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வியல் முறை உள்ளிட்டவை முதல் இடத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.


இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 15 சதவீதம் பேர் நியூயார்க்கில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர் . இரண்டாவது இடத்தை தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் பிடித்துள்ளது. 12-ஆவது இடம் பிடித்திருக்கும் மும்பை பாரம்பரிய தடயங்களை உயிர்ப்புடன் பராமரித்து நவீன வாழ்வியலை கட்டமைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நகரத்தின் வசீகரம், மயக்கு பாலிவுட் உலகம், அரபிக்கடல் ,காற்றின் இனிமையான தொடுதல், வரலாற்று அம்சங்கள், ஆன்மீகம் முதல் விளையாட்டு வரை ஏராளமான அம்சங்கள் மும்பையை உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடிக்க வைத்திருக்கின்றன.


ஜெர்மனியின் பெர்லின் நகரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் நான்காவது இடம் வகிக்கிறது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ, இங்கிலாந்தின் லிவர்பூல் ,ஜப்பானின் டோக்கியோ , இத்தாலியன் ரோம், போர்ச்சுக்களின் போர்டோ ஆகிய நகரங்கள் 6 முதல் 10 வரையிலான இடங்களை வகிக்கின்றன. மும்பைக்கு முந்தைய இடத்தை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் பிடித்துள்ளது.


SOURCE : Dailythanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News