Kathir News
Begin typing your search above and press return to search.

காற்று மாசு பாட்டில் டெல்லியை மிஞ்சிய மும்பை

காற்று மாசுபாட்டில் டெல்லியை விட அதிக அளவு இப்பொழுது மும்பை நகரம் உள்ளது.

காற்று மாசு பாட்டில் டெல்லியை மிஞ்சிய மும்பை

KarthigaBy : Karthiga

  |  25 Oct 2023 2:30 PM GMT

நாட்டின் தலைநகர் டெல்லி தான் காற்று மாசுபாடு கொண்ட நகரமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த பட்டியலில் இப்போது மும்பையும் இணைந்துள்ளது. மும்பையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி அமைப்பின் அளவீட்டின்படி அதிகாலையில் மும்பையின் காற்று தர குறியீடு நூற்று பத்தொன்பது என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. ஆனால் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 83 ஆகத்தான் பதிவாகி இருக்கிறது.


குறிப்பாக அந்தேரி, மஸ்கான் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது. காலை 9 மணிக்கு தான் தெளிவான வானிலை பார்க்க முடியும் என்று கட்டிடங்களில் பனிமூட்டம் சூழ்ந்துள்ள வீடியோவை ஒருவர் பகிர்ந்துள்ளார் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வீசும் குளிர்ந்த காற்று கடற்கரையோரம் நிலவும் வெப்பமான காற்றை தாக்குகிறது. அந்த பகுதியில் வளர்ந்திருக்கும் தூசுகள் இருவேறு காற்றின் பரப்பில் கலப்பதே தூசு மாசுபாடு அதிகரிப்பதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அந்தேரி, மஸ்கான் மற்றும் நவிமும்பை கடலோர மும்பையில் தூசி மற்றும் புகையுடன் கூடிய வெப்பமான காற்று தேங்கி நிற்கிறது என்கிறார்கள்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News