Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 11 ஆவது ஆண்டு அனுசரிப்பு! முதலமைச்சர், கவர்னர் மரியாதை !

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 11 ஆவது ஆண்டு அனுசரிப்பு! முதலமைச்சர், கவர்னர் மரியாதை !

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 11 ஆவது ஆண்டு அனுசரிப்பு! முதலமைச்சர், கவர்னர் மரியாதை !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 7:33 AM GMT


2008 நவம்பர், 26ம் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, 2008, நவம்பர் 26ம் தேதி மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர், 2 நாட்கள் கடும் சண்டை நடந்தது.


முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவரை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 2012 துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.



உலகையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர், பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர். 500பேர் படுகாயம் அடைந்தனர்., சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையமே ரத்த வெள்ளத்தில் மிதந்ததையும், உறவுகளை பறிகொடுத்தவர்களின் கதறல்களையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.


அந்த கொடூர தாக்குதல் நடந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த போலீஸ் அதிகாரிகளின் நினைவிடம் மெரின்டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் உள்ளது. அங்கு மஹாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து உயிர்த்தியாகம் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினார்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News