முரசொலி மூலப்பத்திரம் பிரச்சனைக்கு H.வசந்தகுமார் எம்.பி.தான் காரணமாம்! - வைரலாக உலாவரும் பதிவு
முரசொலி மூலப்பத்திரம் பிரச்சனைக்கு H.வசந்தகுமார் எம்.பி.தான் காரணமாம்! - வைரலாக உலாவரும் பதிவு
By : Kathir Webdesk
முரசொலி மூலப்பத்திரம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதனை மறைப்பதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலினும், கூட்டணி கட்சி எடுபிடிகளும் படாத பாடு படுகின்றனர். வேறு பிரச்சினைகள் மூலம் திசை திருப்பிவிட தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் மீறி முரசொலி மூலப்பத்திரம் எங்கே? என்ற புள்ளியில் மீண்டும் மீண்டும் அவர்களை கொண்டு நிற்க வைக்கிறது தர்மம்.
ஸ்டாலினின் முரசொலி மூலப்பத்திரம் பிரச்சினைக்கு மூல காரணம் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பியான எச்.வசந்தகுமார்தான் என்று ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்தப் பதிவு:-
வந்தகுமார்: ஹிஹிஹி வணக்கம் தலைவரே! ஹிஹிஹிஹி...
ஸ்டாலின்: அப்படி சிரிக்காதேயா! எரிச்சலா இருக்கு. உன்னாலதான் என் பொழப்பு இப்ப சிரிப்பா சிரிக்குது...
வந்தகுமார்: நான் என்ன பண்ணுனேன் தலைவரே?
ஸ்டாலின்: உன்ன எவன்யா நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவிய ராஜினாமா பண்ண சொன்னது? நீ ராஜினாமா பண்ணுனதுனாலதானே இடைதோ்தல் வந்திச்சி...
அதனாலதானே நான் பிரச்சாரம் பண்ண வந்தேன்!
அதனாலதானே “அசுரன்” படம் பார்க்க போனேன்!
அதனாலதானே பஞ்சமி நிலம் பத்தி பேசுனேன்!
அதனாலதானே எல்லோரும் அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்துல இருக்குன்னு சொல்லுறானுக!
அதனாலதானே இப்ப மூலப்பத்திரம் எங்கேன்னு கேக்குறாங்க?
அதனாலதானே அத பற்றிபேசபோன பொன்முடி, மிசா பத்தி பேசுனாரு!
அதனாலதானே, நான் மிசா கைதி இல்லைன்னு சொன்னானுக!
அதனாலதானே, நான் சிறையில் இருந்த ஆதாரமா என் அப்பா எழுதுன கடிதத்த காட்டுனேன்!
மதனாலதானே அந்த கடிதத்த வெச்சி என்ன இன்னும் அசிங்கப்படுத்துறாங்க?
இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்யா !
வந்தகுமார்(மைண்ட் வாய்ஸ்) : அடகடவுளே, நான் எம்பி ஆனதுனால கன்னியாகுமரிக்குத்தான் சீரழியுதுன்னு சொன்னானுக. இவரு அவரோட கட்சி, குடும்பம் சீரழியுறதுக்கும் நான் எம்பி ஆனதுதான் காரணம்னு சொல்லுறாரே!
ஸ்டாலின்: வைய்யா போன, மூலபத்திரம் எங்கேன்னு மறுபடியும் கேட்கிறானுக... வேறு ஏதாவது பொணம் விழுதான்னு பாக்கணும்...