Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினை காப்பாற்றுகிறாரா எடப்பாடி? முரசொலி - பஞ்சமி நில 1932-கெஜட் ஆதாரத்தை வழங்கினார் தடா பெரியசாமி! அரசிடம் 1974-க்கு பிந்தைய ஆதாரங்கள்தான் உள்ளதாம்!

ஸ்டாலினை காப்பாற்றுகிறாரா எடப்பாடி? முரசொலி - பஞ்சமி நில 1932-கெஜட் ஆதாரத்தை வழங்கினார் தடா பெரியசாமி! அரசிடம் 1974-க்கு பிந்தைய ஆதாரங்கள்தான் உள்ளதாம்!

ஸ்டாலினை காப்பாற்றுகிறாரா எடப்பாடி? முரசொலி - பஞ்சமி நில 1932-கெஜட்  ஆதாரத்தை வழங்கினார் தடா பெரியசாமி! அரசிடம் 1974-க்கு பிந்தைய ஆதாரங்கள்தான் உள்ளதாம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 10:28 AM GMT


முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஸ்ரீநிவாசன் புகார் மனு ஒன்றை அளித்தார்.


அந்த மனு அடிப்படையில் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பான விசாரணை நேற்று (19.11.2019) சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தேசிய பட்டியலின ஆணைய அலுவலகத்தில் நடந்தது. இந்த விசாரணையில் ஆஜராகி ஆதாரங்களை அளிக்குமாறு முரசொலி அறக்கட்டளை நிர்வாக மேலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. சீனிவாசனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. மற்றொரு புகார் தாரரான தடா பெரியசாமிக்கும் இதே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் ஆஜராகி அரசு தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.


இந்த விசாரணையில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக மேலாளர் உதயநிதி ஆஜராகவில்லை. அதோடு அவரின் சார்பாக கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதியும், எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. ஒரு கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு ஓடி விட்டார்.


அரசு தரப்பில் 1974-ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சில ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்த நிலம் தலித்திடமிருந்து மற்ற சமூகத்தினரிடம் கைமாறிய பிறகு உள்ள ஆவணங்கள் ஆகும். அந்த நிலத்தின் மூலப்பத்திரத்தையோ அல்லது அதற்கு நிகரான ஆதாரங்களையோ அரசு சார்பில் சமர்பிக்கப்படவில்லை. 1974-ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆவணங்களை சமர்ப்பித்ததன் மூலம் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்று நிரூபிக்கின்றன முயற்சியில் எடப்பாடி அரசு தரப்பு ஈடுபட்டுள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.


அதேபோல சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பஞ்சமி நிலமே இல்லை என்று எடப்பாடி அரசு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதுவும் முரசொலி – பஞ்சமி நில விவகாரத்தை குழி தோண்டி புதைக்கும் முயற்சியே.


ஒரு தனி நபரான தடா பெரியசாமியால், 1934-ஆம் ஆண்டு கெஜட் ஆதாரத்தை கொடுக்க முடியும் போது, அரசு தரப்பில் 1974-ஆம் ஆண்டிற்குப் பிறகு உள்ள ஆதாரங்களை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றால், இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பித்தலாட்ட முயற்சி என்பதில் ஐயமில்லை.


இதுதொடர்பாக தடா பெரியசாமி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-


இன்று (19.11.2019) - தேசிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் முரசொலி அலுவலக மூலபத்திரத்தை ஸ்டாலின் தரப்பில் சமர்ப்பிக்கவில்லை. பஞ்சமி நிலம் சம்பந்தமாக ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று திமுக தரப்பில் வாதிட்டார்கள்.


தமிழக அரசு சார்பில் 1974-ஆம் ஆண்டுக்கான சில தகவல்களை வைத்திருந்தார்கள். மேலும் சென்னை மாவட்டத்தில் பஞ்சமி நிலமே இல்லை என்று தகவல் கூறினார்கள்.


பிறகு என்னிடமிருந்த 1932-ஆம் ஆண்டு பஞ்சமி நிலம் வழங்கியதற்கான கெஜட் ஆவணங்களை சமர்ப்பித்தேன். அதை ஏற்றுக்கொண்ட ஆணையம், அத்தகவல்களை சீல் வைத்து தலைமை செயலாளரிடம் கொடுத்து, அரசிடம் பதில் கேட்டது. பிறகு அத்தகவல்களை வைத்துக்கொண்டு தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ளது.


https://m.facebook.com/story.php?story_fbid=460305628009789&id=100020910663995


இவ்வாறு தடா பெரியசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தனி நபர் ஆன தடா பெரியசாமி இடம் வெள்ளைக்காரன் காலத்தில் உள்ள 1932-ஆம் ஆண்டு கெஜட் ஆதாரம் இருக்குமென்று திமுக தரப்பு எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் எடப்பாடி அரசு தரப்பும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் திமுக தரப்பு பீதியில் உறைந்து போய் உள்ளது.


இதனால்தான் பதட்டத்தில் உச்சத்தில், ஸ்ரீனிவாசன் தலித் அல்ல, தேசிய பட்டியலின ஆணையத்திற்று பஞ்சமி நிலம் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் இல்லை என்றெல்லாம் அழுது புலம்பு கின்றனர் திமுகவினர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அந்த சூட்டோடு சூடாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார், திருமாவளவன். என்ன செய்தியை ஸ்டாலினிடம் இருந்து பெற்று, எடப்பாடி பழனிசாமியிடம் சேர்த்தார்?


இதனைத்தொடர்ந்துதான் தமிழக அரசு தரப்பில், முரசொலி மூலப்பத்திர ஆதர சொதப்பல் அரங்கேறி உள்ளது. எனவே திரைமறைவில் மிகப்பெரிய பேரம் நடந்துள்ளது என்பதை நிராகரித்துவிட முடியாது. முரசொலி இடம் பஞ்சமி நிலமா? என்பதை அறிவிக்க அரசாங்கத்திற்கு எதற்கு மாதக்கணக்கில் அவகாசம்? எனவே இதன் பின்னணியில் ஏதோ பெரிய அளவில் பேரம் நடந்துள்ளது என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.


எனவே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான மூலப்பத்திரத்தை தமிழக அரசு, தேசிய பட்டியலின ஆணையத்திடம் உடனே அளித்து, நாட்டுமக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. அதை அவர் காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும். அல்லது வருகின்ற தேர்தல்களில் மக்கள் செய்துவிடுவார்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News