தமிழக பா.ஜ.க தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் நியமனம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழக பா.ஜ.க தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் நியமனம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு உத்தரவின் பேரில், தெலங்கானா ஆளுநராக தமிழிசை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.
ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் என பல்வேறு அடிபட்டன. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக பாஜக தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.