Kathir News
Begin typing your search above and press return to search.

“சப்தங்கள்” மூலம் உடல் மற்றும் மன இறுக்கத்தை சரிப்படுத்த முடியுமா?

“சப்தங்கள்” மூலம் உடல் மற்றும் மன இறுக்கத்தை சரிப்படுத்த முடியுமா?

“சப்தங்கள்” மூலம் உடல் மற்றும் மன இறுக்கத்தை சரிப்படுத்த முடியுமா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2019 2:44 AM GMT



ஒலியிலிருந்து தான் நாம் பார்க்கின்ற எல்லாமே உருவானது என்று மத நூல்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவருகின்றனர். அந்த ஒலியானது ஒரு குறிப்பிட்ட அளவில், ஒரு குறிப்பிட்ட அடர்த்தியில் இருக்கும்போது இனிமையான சப்தங்களாய் மாறுகிறது. இசைக்கருவிகளோ இசைக்கலைஞர்களோ எழுப்பும் ராகங்கள் ஒருவகை இனிமையான சப்த ஒலிகளே!! இந்த இசை சப்தங்களால் பல அற்புதங்களை செய்ய முடியும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன


மேற்கத்திய இசைக்கு “நோட்ஸ்” தனித்துவ குறிப்புகள் தேவைப்படுவது போல், இந்திய ராகங்களுக்கு தேவைப்படுவதில்லை காரணம், இவை இயல்பிலேயே தெய்வீகத் தன்மை கொண்டவை. இவை வழி வழியாக குரு சிஷ்யப் பாரம்பரியத்தில் மனனத்தின் மூலமாக கடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ராகங்கள் ஏராளமான அற்புதங்களை செய்ய வல்லவை. ஒரு காயை கனிய வைக்கவோ அல்லது மழையை வரவழைக்கவோ இந்த சப்தங்களால் முடியும்.



இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் இதுபோன்ற ராக சப்தங்களை, உடல் மற்றும் மன வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இயல்பாகவே சப்தங்கள் தங்களுடைய அடர்த்தி மற்றும் தன்மையைப் பொறுத்து ஒருவரை எரிச்சலடைய வைக்கவோ அல்லது சாந்தப்படுத்தவோ முடியும்.


நம்முடைய ஒவ்வொரு உணர்வுபூர்வமான நடவடிக்கைக்கும் ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலம் காரணமாக அமைகிறது. உதாரணமாக நாம் ஒரு சூழ்நிலையை எப்படிக் கையாளுகிறோம், உதாரணமாக ஒரு சூழலில் து பயப்படுகிறோமா அல்லது எதிர்த்து நிற்கிறோமா என்பது அந்த குறிப்பிட்ட நரம்பு மண்டலம் எப்படி பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையே சார்ந்திருக்குமாம்.



ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இருக்கும் இனிமையான சப்த அலைகள் நம் உடலில் உள்ள வேகஸ் நரம்பு மண்டலத்தை தளர்த்தி புத்துணர்வு பெற செய்கிறது. இதனால் நம் உடலும் மனமும் அமைதியாகவும் புத்துணர்வுடனும் இருக்கு இயலும் என்கின்றன ஆய்வுகள். இதற்கு இசைக்கருவிகள் கூட தேவையில்லை வெறுமனே வாயால் பாடுவதோ அல்லது சப்தம் எழுப்புவதோ கூட போதுமானதாக இருக்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது மன இறுக்கத்தை மட்டுமல்லாமல் இதய மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களில் ஆரம்பகட்ட அசௌகரியங்களையும் மாற்றி சரிசெய்து விடுகிறது.



நமது மூளையில் உள்ள “அமெக்டாலா “ என்ற பகுதிதான் உணர்வுகளை ஆட்சி செய்கிறது. இனிமையான சப்தங்கள் மூளையில் இந்த பகுதியை தூண்டி உணர்வு நிலைகளை சமன் செய்கிறது. உடல் வலிகள், தசை நார் வலிகள் போன்றவற்றையும் இனிமஇயஅன சப்தங்கள் சரிசெய்ய இயலும் என தற்போதைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இந்த சப்த சிகிச்சையை அல்சைமர் போன்ற “நினைவு மறதி “ வியாதிகளை குணப்படுத்தவும் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இன்றைக்கு மேற்கத்திய நாடுகளில் இது போன்ற சிகிச்சைகள் மிகப் பிரபலமாக உள்ளன. இசை மூலமாக பல ஆச்சர்யமான சிகிச்சைகளை உலகத்தார் செய்து வருகிறார்கள். ஆனால் இத்தனைக்கும் இந்தியாவில் உள்ளது போன்று இசைக்கலைஞர்கள் எண்ணிக்கை அவர்களிடத்தில் குறைவு.



நம்முடைய இசையில் உள்ள நூற்றுக்கணக்கான ராகங்கள் இயற்கையாகவே அதன் தன்மைக்கு ஏற்ப பல ஆற்றல்களை பெற்றிருக்கிறது. இதை தற்காலத்தைய மனநல மற்றும் உடல்நல தேவைகளுக்கு பயன்படுத்தினால் மிகச்சிறந்த பலன்களை நாம் அடைய முடியும்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News