"முஸ்லிம் பயங்கரவாதி ஓவைசி" - மம்தா; "நாட்டிலேயே மேற்கு வங்காளத்தில்தான் முஸ்லிம்கள் நிலை மோசமாக உள்ளது" - ஓவைசி!
"முஸ்லிம் பயங்கரவாதி ஓவைசி" - மம்தா; "நாட்டிலேயே மேற்கு வங்காளத்தில்தான் முஸ்லிம்கள் நிலை மோசமாக உள்ளது" - ஓவைசி!
By : Kathir Webdesk
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கணிசமான முஸ்லிம் சமுதாய மக்களின் வாக்குகளை யார் பெறுவது என்பதில், மேற்கு வங்காள மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், முஸ்லிம் மதவாத கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஓவைசிக்கும் கடுமையான குடுமிப்பிடி சண்டை ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பாக இருவரும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி பூசி வருகின்றனர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் அப்பாவி மக்களை மூளை சலவை செய்து வருகின்றனர். இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளிடமிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும். இந்த முஸ்லிம் பயங்கரவாதமானது, மேற்கு வங்காள மாநிலத்தில் உருவாக வில்லை. ஹைதராபாத்திலிருந்து செயல்படும் ஒரு அரசியல் கட்சியால் திணிக்கப்படுகிறது” என்று பேசினார்.
ஏ.ஐ.எம. ஐ.எம் கட்சித்தலைவர் ஓவைசியின் பெயரை குறிப்பிடாமல், அவரை மம்தா கிழித்து தொங்க விட்டார். ஒவைசி, முஸ்லிம் சமுதாய மக்களிடம், மத வெறியை தூண்டிவிட்டு அதன் மூலம் குளிர் காய்ந்து வருகிறார் என்பது நாடறிந்த உண்மை. இதைத்தான் மம்தா தனது வாயால் அறிவித்து உள்ளார்.
மம்தாவின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள ஓவைசி, “ஆட்சி அதிகாரத்தால் மம்தாவும், அவரது கட்சியினரும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற சிறுபான்மையினரை ஒப்பிடுகையில், மேற்குவங்காளத்தில்தான் முஸ்லிம் மக்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது” என்றார்.
மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள முஸ்லிம் சமுதாய மக்களின் வாக்கு வங்கியை மூலதனமாகக் கொண்டே மம்தா பானர்ஜி அதிகாரத்தை கைப்பற்றி வந்துள்ளார். இப்போது அதற்கு வேட்டு வைக்கின்ற வகையில் ஒவைசி மேற்குவங்கத்தில் நுழைந்து, முஸ்லிம் சமுதாய மக்களின் வாக்குகளை பிளக்க முயற்சித்துள்ளார். இது மேற்கு வங்க மம்தாவை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.