Kathir News
Begin typing your search above and press return to search.

"என் பிறப்பே மக்கள் சேவைக்காக தான் , ஊழலை ஒழிப்பதும் நாட்டின் வளர்ச்சியுமே நோக்கம்" - பிரதமர் மோடி

மக்களுக்கு சேவை செய்யவே நான் பிறந்துள்ளேன் என்று சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

என் பிறப்பே மக்கள் சேவைக்காக தான் , ஊழலை ஒழிப்பதும் நாட்டின் வளர்ச்சியுமே நோக்கம் - பிரதமர் மோடி
X

KarthigaBy : Karthiga

  |  8 Nov 2023 4:45 AM GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் 17-ஆம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்கும் மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசியதாவது :-


காங்கிரஸ் கட்சி நக்சல் பயங்கரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது. நாட்டில் காங்கிரஸ் கட்சி எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நக்சலைட்களும் பயங்கரவாதிகளும் தைரியம் அடைவார்கள். குண்டு வெடிப்புகளும் கொலைகளும் நடந்ததாக செய்திகள் வரும். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் குற்றங்களும் கொள்ளைகளும் நடக்கும். பா.ஜனதாவை சேர்ந்தவர்களும் இங்கு குறி வைத்து கொலை செய்யப்படுகிறார்கள். வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் நிழலில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா?


உங்களிடம் நிறைய பணம் இருக்கலாம். ஆனால் மாலையில் உங்கள் மகன் வீட்டுக்கு வராமல் அவனது உடல் வந்தால் அந்த பணத்தால் என்ன பயன்? எனவே ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு முக்கியம். அதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் காங்கிரசை அகற்ற வேண்டும். நான் உங்களுக்கு சேவை செய்யவே பிறந்துள்ளேன். உங்களுக்கு சேவை செய்வதற்கான வேலையை நீங்கள் தான் எனக்கு அளித்தீர்கள்.


சத்தீஸ்காரரில் 'மகாதேவ்' பந்தய செயலி மூலம் பெரிய ஊழல் நடந்துள்ளது. அது பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவாதிக்கப்படுகிறது. அந்த ஊழல் வாதியே முதல் மந்திரி பூபேஷ் பாகலுக்கு ரூபாய் 500 கோடி கொடுத்ததாக கூறும் போது ஆதாரமே தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார். மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது காங்கிரஸ் கட்சி தினம்தோறும் என்னை வசைபாட மறப்பதில்லை. நாட்டின் முதலாவது பழங்குடியின பெண் ஜனாதிபதியை தேர்வு செய்வதை கூட எதிர்த்தது.


பழங்குடியினரின் ஓட்டு வங்கியில் தான் காங்கிரஸுக்கு அக்கறை. அவர்களின் நலன்களில் அக்கறை இல்லை, நாட்டின் முதலாவது தலித் தலைமை தகவல் ஆணையர் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. நாட்டில் ஊழல்களை தடுத்து நிறுத்தி அதன் மூலம் நிறைய பணம் சேமிக்கப்பட்டுள்ளது. அப்பணம் ஏழைகளுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News