Kathir News
Begin typing your search above and press return to search.

நான் பயங்கரவாதியாக வேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பம் - பின் லேடன் மகன் உமர் பரபரப்பு

நான் பயங்கரவாதியாக வேண்டும் என்று தான் அப்பா விரும்பினார் என்று பின்லேடனின் மகன் உமர் ஒரு சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

நான் பயங்கரவாதியாக வேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பம் - பின் லேடன் மகன் உமர் பரபரப்பு
X

KarthigaBy : Karthiga

  |  2 Dec 2022 2:15 PM GMT

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி அன்று காற்று கூட புக முடியாது என கூறப்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும், பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை அரங்கேற்றினர்.3000 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். சரியாக பத்து ஆண்டுகள் கழித்து இந்த பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது 2016 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த பின்லேடனின் நான்காவது மகன் உமர் பின்லேடன் ஆவார். இவர் ஓவியர், எழுத்தாளர், கலாச்சார தூதர், தொழிலதிபர் எனப் பல முகங்களைக் கொண்டவர்.அவர் பின்லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவராவார்.


இவர் இங்கிலாந்தை சேர்ந்த தனது மனைவி ஜேன் என்ற ஜைனா பின்லேடனுடன் பிரான்சில் உள்ள நார்மல் என்ற இடத்தில் வசிக்கிறார்.உமர் பின்லேடன் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி சன் ' பத்திரிகையில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-


நான் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் குழந்தை பருவத்தை கழித்தேன். அங்கு எனது செல்ல நாய்கள் ரசாயன ஆயுதங்களை சோதிக்க பயன்படுத்தப்பட்டன. என் தந்தையின் உதவியாளர்கள் அந்த சோதனையில் ஈடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை .எனக்கு பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஏ.கே 47 துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்று தான் அப்பா விரும்பினார். நான் என்னால் முடிந்தளவு இந்த மோசமான தருணங்களை மறக்கத்தான் விரும்புகிறேன். நான் 2001 ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிி விட்டேன். கடைசியாக நான் அப்பாவிடம் பேசியது அவரிடம் விடைபெற்றபோது 'குட்பை' என்ற வார்த்தையாகும்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News