“எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே பித்தலாட்டம் செய்வான்” - வலிய வந்து சிக்கிய ஸ்டாலின்! வைரலானது வீடியோ!!
“எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே பித்தலாட்டம் செய்வான்” - வலிய வந்து சிக்கிய ஸ்டாலின்! வைரலானது வீடியோ!!
By : Kathir Webdesk
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைகளில் உளறுவதை கேட்டு கேட்டு சலித்துப்போன சமூக வலைதள வாசிகளுக்கு, அவர் தானாகவே முன்வந்து அற்புதமான வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-
நான் பிறந்தபோது, ஸ்டாலின் ரஷ்ய நாட்டிலே மறைந்தார் என்ற செய்தி வந்தது. அப்போ அதற்கு இரங்கல் கூட்டம், கடற்கரையிலே நடந்தது. கலைஞர் பேசிக்கொண்டிருக்கிறார். பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ஒரு துண்டு சீட்டை கொண்டு வந்து கொடுத்தாங்க. என்னண்ணா, உங்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்று இருந்தது. இதை படிச்ச உடனே எனக்கொரு மகன் பிறந்திருக்கிறான். இது ஸ்டாலினுடைய இரங்கல் கூட்டமாக இருக்கின்ற காரணத்தால், என் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன் என்று கலைஞர் அவர்கள் அறிவித்தார்.
இவ்வாறு அதில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
(“கருணாநிதியிடம் ஒரு துண்டு சீட்டு வழங்கப்பட்டது” - இந்தத் துண்டு சீட்டு கலாச்சாரம் அப்போதே நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்)
ஸ்டாலின் என்று தனக்கு ஏன் பெயர் வைத்தார்கள் என்று மு.க.ஸ்டாலின் இப்படித்தான் மேடைகளில் உளறி வருகிறார்.
இதன் உண்மை தன்மைதான் இப்போது, ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்டு வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஜோசப் ஸ்டாலின் இறந்தது 1953 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி. மு.க.ஸ்டாலின் பிறந்தது 1953-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி.
மு.க.ஸ்டாலின் பிறந்தது - 1.3.1953
ஜோசப் ஸ்டாலின் மறைவு - 5.3.1953
இதுதான் வரலாறு.
துண்டு சீட்டு வந்தது, அதைப் படித்த உடனே எனன்கொரு மகன் பிறந்திருக்கிறான் என்றது, அவனுக்கு ஸ்டாலின் என்று பெயரிடுகிறேன் என்றது, அனைத்தும் கடைந்தெடுத்த பொய் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இதில் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த வரலாற்று நிகழ்வை “நெஞ்சுக்கு நீதி” என்ற தனது சுய சரிதை புத்தகத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளாராம். அதையும் மு.க.ஸ்டாலினே மேடைக்கு மேடை சொல்லி வருகிறார்.
மகனின் பெயர் வைத்த விஷயத்திலேயே இவ்வளவு பெரிய பித்தலாட்டத்தை அரங்கேற்றி விட்டு அதை, “நெஞ்சுக்கு நீதி” புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார் கருணாநிதி். அப்படியானால் அந்த புத்தகம் முழுவதும் எவ்வளவு பொய் - பித்தலாட்டங்கள் இடம்பெற்றிருக்கும்?
துண்டு சீட்டை மட்டும் கருணாநிதியிடமிருந்து, மு.க.ஸ்டாலின் காப்பியடிக்க வில்லை, பொய், பித்தலாட்டங்களையும் கருணாநிதியிடமிருந்து வரங்களாக பெற்றுள்ளார்.
“எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்” என்று பாடியது கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும் மனதில் வைத்துதான் எழுதப்பட்டதோ என்னவோ?
இப்போது இது தொடர்பான ஆதாரங்கள் வீடியோ வடிவில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று அதைப் பார்த்து காறி துப்பங்கள்!
https://m.facebook.com/story.php?story_fbid=475155043066939&id=490247478376829