மியான்மர்: ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்.!
மியான்மர்: ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்.!
By : Kathir Webdesk
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 3வது நாளாக தொடரும் போராட்டத்தால் அந்நாட்டு ராணுவம் திணறிவருகிறது.
மியான்மரில் ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அந்நாட்டு ராணுவம் ஆங் சாங் சூகியை சிறைப்பிடித்தது. மேலும், ஆட்சியையும் ராணுவம் கைப்பற்றியது. இதனால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு, உடனடியாக ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டம் வலுத்து வருகிறது.
போராட்டம் செய்யும் மக்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்து வருகின்றனர். ஆனாலும் தலைநகர் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அந்நாட்டு ராணுவம் செய்வதறியாமல் திகைத்து வருகிறது.