காய் டயரை தனியாளாக கழற்றி மாற்றிய மைசூர் பெண் கலெக்டர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

By : Thangavelu
மைசூரு மாவட்ட ஆட்சியராக ரோகிணி சிந்தூரி பணியாற்றி வருகிறார். அவருடைய கார் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. இதனையடுத்து தனியாளாக கழற்றி சரி செய்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆட்சியர் ரோகிணி சிந்தூரி தனது குடும்பத்துடன் அண்மையில் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது கார் டயர் பஞ்சர் ஆனதால், கார் பாதி வழியில் நின்றுள்ளது.
இதனால் மெக்கானிக் வரும்வரை அவர் காத்திருக்காமல் தானே களத்தில் இறங்கியுள்ளார். அதாவது ரோகிணி சிந்தூரி தனது காரில் இருந்த ஜாக்கி பயன்படுத்தி பஞ்சரான டரயை கழற்றி மீண்டும் மற்றொரு டயரை மாற்றியுள்ளார்.
அப்போது அந்த சாலை வழியாக சென்ற பெண் ஒருவர் ரோகிணி சிந்தூரியை அடையாளம் கண்டுப்பிடித்துள்ளார். இதனையடுத்து அவருடைய செல்போனில் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது பற்றி ரோகிணியிடம் சென்று விசாரணையும் செய்துள்ளா.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோக்களை அந்த பெண் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தனியாளாக களத்தில் இறங்கி கார் டயரை மாற்றியுள்ளார் என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பெண் ஆட்சியரை கர்நாடக மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஒரு மாவட்டத்தையே ஆட்சி செய்து வருபவர் நினைத்தால் உடனடியாக மற்றொரு காரை வரவழைத்து சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல் தன்னுடைய காரை தானே சரிசெய்து கொண்டு சென்ற சம்பவத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
