Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி கல்லூரியில் முஸ்லிம் மாணவி மர்ம மரணம்! ஸ்டாலின் வாய் திறக்காதன் அதிர்ச்சி பின்னணி!

திருச்சி கல்லூரியில் முஸ்லிம் மாணவி மர்ம மரணம்! ஸ்டாலின் வாய் திறக்காதன் அதிர்ச்சி பின்னணி!

திருச்சி கல்லூரியில் முஸ்லிம் மாணவி மர்ம மரணம்! ஸ்டாலின் வாய் திறக்காதன் அதிர்ச்சி பின்னணி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2019 11:54 AM GMT


திருச்சி கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் உள்ளது அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. முஸ்லிம் கல்வி நிறுவனமான இங்கு, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன், கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு பி.எஸ்சி நியூட்ரிஷன் மற்றும் டையட்டிக்ஸ் படித்து வந்தார்.


இந்நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தற்கொலை என்று கல்லூரி நிர்வாகம் கூறி மூடி மறைக்க முயன்றுள்ளது. முதலில், மாணவி ஜெப்ரா பர்வீனுக்கு ஆங்கிலம் சரியாக வராததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கதை கட்டிவிட்டனர்.


அது நம்பும் படியான இல்லாததால், அவர் செல்போன் பயன்படுத்த விடுதியில் தடை விதித்து இருந்ததால், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அடுத்த திரைக்கதை அமைத்தனர். இதுவும் தலை குப்புற கவிந்து விட்டது.


இது வடிகட்டிய பொய் என்பதை நாம் கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதாவது தனியார் கல்லூரி விடுதிகளில், குறிப்பிட்ட நேரம் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்கப்படும். அய்மான் கல்லூரியிலும் அப்படித்தான். இந்த விதிமுறைகள் விடுதியில் சேரும்போதே ஒவ்வொரு மாணவிக்கும் தெரிவிக்கப்பட்டுவிடும். எனவே இதிலும் உண்மை இல்லை.



திருச்சி கல்லூரியில் முஸ்லிம் மாணவி மர்ம மரணம்! ஸ்டாலின் வாய் திறக்காதன் அதிர்ச்சி பின்னணி!


காலை 6.30 மணிக்கு மாணவி ஜெப்ரா பர்வீன் தூக்கில் தொங்கியதாக சொல்கிறது கல்லூரி நிர்வாகம். ஆனால் 10.30 மணிக்கு மேல்தான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதற்குள் மரணத்துக்கான தடயங்களை அழித்து விட்டனர். காரணங்களையும் மாற்றியுள்ளனர். மாணவி ஜெப்ரா பர்வீன் மர்ம மரணத்தை மூடி மறைப்பதற்கு தேவையான கதை, வசனத்தை எல்லாம் கல்லூரி நிர்வாகம் அமைத்து உள்ளது.


அதோடு, மாணவி ஜெப்ரா பர்வீனுடன் அவரது அறையில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநில மாணவி ஆதிபா உள்பட பிற மாணவிகளையும், இந்த மர்ம மரணம் குறித்து தெரிந்துகொண்ட மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் மிரட்டி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


மேலும் கல்லூரி நிர்வாகம், காவல் துறையை முறையாக “கவனித்து” உள்ளது. அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி உள்ளது. இதனால் போலீசார், சம்பிரதாய விசாரணையை நடத்திவிட்டு, கல்லூரி நிர்வாகம் என்ன விரும்பியதோ அதன்படி நடந்து உள்ளது.


ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்யவில்லை என்றும், அது கொலை என்றும், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை. மர்மமான முறையில் இறந்தது வெளி மாநில மாணவி என்பது இவர்களுக்கு கூடுதல் வசதியாக போய் விட்டது.


இதனால் அங்கு நடந்த மர்ம கொலை ஒன்று, சிறுபான்மை தார்ப்பாய் போட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.


எனவே உயர் மட்ட அளவில் முறையான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள.


இது ஒருபுறம் இருக்க, சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாணவளவன், ஜவாஹிருல்லா, தமிமும் அன்சாரி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் போன்றோர், திருச்சியில் மாணவி ஜெப்ரா பர்வீன் மர்ம மரணம் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை.


சென்னை ஐஐடி மாணவியைப் போன்று திருச்சி மாணவியும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்தான். ஆனால் சென்னை ஐஐடி மாணவி தற்கொலைக்கு மட்டும் திமுகவின் போராடம் என்ன?அறிக்கைகள் என்ன? டுவிட்டுகள் என்ன? பேட்டிகள் என்ன?


ஆனால் மர்மமான முறையில் மரணம் அடைந்த மாணவி ஜெப்ரா பர்வீனுக்கான, ஸ்டாலின் இரங்கல்கூட தெரிவிக்கவில்லையே ஏன்?


இரு மாணவிகளுமே முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். இருவரும் தமிழர்கள் அல்ல. ஒருவர் மலையாளி, ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.


அப்படியானால் எது ஸ்டாலினை தடுத்தது? ஒரே காரணம்தான், திருச்சி கல்லூரி முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது. அங்கு முஸ்லிம் மாணவியே மரணம் அடைந்தாலும் அவருக்காக திமுகவின் இதயாம் துடிக்காது. திமுகவின் கூட்டணி அடிமைகளின் இதயங்களும் துடிக்காது.


தமிழக ஊடகங்களுக்கு என்னவாயிற்று?


அவர்களுக்கு கிட்னிகள் செயல் இழந்து போய்விட்டனவா?


Next Story
கதிர் தொகுப்பு
Trending News