'சாத்தானின் வேதங்கள்' சர்ச்சை புத்தகம் எழுதிய சல்மான் ருஷ்டியை தாக்கிய 'மர்ம நபர்'
பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மேடையில் கத்தி குத்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By : Mohan Raj
பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மேடையில் கத்தி குத்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சல்மான் ருஷ்டி, பிரபல எழுத்தாளராக இவர் எழுதிய 'சாத்தானின் வேதங்கள்' என்ற நூல் சர்வதேச அளவில் மிகப் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதில் இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்று இருப்பதாக கூறி அவருக்கு எதிரான கடும் போராட்டங்கள் வெடித்தன.
பயங்கரவாதிகளின் மிரட்டலால் வெளிநாடுகளில் பதுங்கி வாழும் பிரபல சர்ச்சை ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வந்திருந்தார். அப்பொழுது மேடையில் பேசும் பொது அவரை நோக்கி வந்த நபர் திடீரென கூர்மையான ஆயுதம் அல்லது கத்தியால் சல்மான் ருஷ்டி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இந்த நிலையில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபர் 24 வயதான ஹடி மடர் என்பதும், அவர் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதலால் சல்மான்னின் ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பார்வை இழக்க நேரிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.