Kathir News
Begin typing your search above and press return to search.

பலியான ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்த என். ஐ.ஏ திட்டம்

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் பலத்தை சேதத்தை ஏற்படுத்தும் அதிபயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பலியான ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்த என். ஐ.ஏ திட்டம்

KarthigaBy : Karthiga

  |  2 Nov 2022 9:45 AM GMT

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் ஒன்று வெடித்த சிதறியது. இதில் ஜமேஷா முபின் இறந்தார். மேலும் அந்த பகுதியில் ஆணிகள், கோலிகுண்டுகள் சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தனர். இந்த எஃப்.ஐ. ஆர் இல் கார் வெடித்ததில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும் பென்டரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் மட்டும் நைட்ரோலிசரின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தவிர பொட்டாசியம் நைட்ரேட் அலுமினியம் பவுடர், ரெட் பாஸ்பரஸ் உட்பட 109 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .இதில் பி.இ.டி.என் மற்றும் நைட்ரோலிசரின் ஆகியவை பலத்தை சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இதனை ராணுவத்தினர் மற்றும் சுங்க தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இது போன்ற வெடி மருந்துகளை வாங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகள் உள்ளன. இதனை மீறி ஜமேஷா முபினுக்கு இத்தகைய அதி பயங்கர வெடி பொருட்கள் கிடைத்தது எப்படி என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் .இது குறித்து வேதியியல் துறை வல்லுநர்கள் கூறியதாவது :-


பி.இ.டி.என் பவுடர் மற்றும் திரவ வடிவிலான நைட்ரோகிளிசரின் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் பி.இ.டி.என் டெட்டனேட்டர் தயாரிக்கவும், நைட்ரோகிளிசரின்சிரின் ஜெலட்டின் தயாரிக்கவும் பயன்படும் முக்கிய மூலப்பொருள் ஆகும்.இந்த பொருள்களின் அருகில் சிறு தீப்பொறி ஏற்பட்டால் கூட உடனடியாக தீப்பிடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே இதனை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை ஆன்லைன் மூலம் வாங்க முடியாது.இதன் அளவு அதிகரிக்கும் போது அதனால் ஏற்படும் சேதமும் அதிகரிக்கும். இது தவிர ரெட் பாஸ்பரஸ் தீ மல மலவென்று பரவ உதவும் என்றனர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பி.இ.டி.என் வெடி மருந்து பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடிபொருட்களை வாங்குவதற்கு வேறு நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும்படி தேசிய புலனாய்வு முகை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதான ஆறு பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் ஜமேஷா முபின் மற்றும் ஆறு பேரின் வீடுகளில் சோதனை நடத்தவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் அவர்களுடன் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் எல்லாம் செல்போனில் பேசினார்கள் என்கிற விவரத்தை சேகரித்து அவர்களிடமும் விசாரணையை தீவிர படுத்த திட்டமிட்டுள்ளனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News