நாகையில் மதுபோதையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் - எங்கே செல்கின்றன அரசுப்பள்ளிகள்?
நாகை அருகே சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
By : Bharathi Latha
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றியத்தின் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. மேலும் இன்ஸ் தொடக்கப் பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் இணை 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர் இரு ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட பகுதியில் வேதாரண்யம் அடுத்த ஊரை சேர்ந்த ஒருவர் அவர்கள் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவிகள் 7 பேர் உள்ளார்கள்.
எனவே இந்த மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதைப் பற்றி வெளியில் யாரிடமும் தெரிவித்தால், தங்களை குளத்தில் தள்ளிக் கொன்று விடுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் இதன் காரணமாக மாணவிகள் அனைவரும் வந்து தங்களுடைய வீடுகளில் இதை தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார். ஆனால் ஒரு மாணவி மட்டும் இதைப் பற்றி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
புகார் அளிக்க சென்ற பெற்றோரிடம் அந்த ஆசிரியர்க்கு ஆதரவாக சிலர், பணம் தருவதாக சொல்லியும் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் இதன் காரணமாக குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தி பின் உண்மை வெளிவந்தது அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy: Malaimalar News