ஸ்ரீ ராமர் சிவனை வழிப்பட்ட கோவில் - பிரம்மிபூட்டும் ராமநாதர் ஆலயம்!
ஸ்ரீ ராமர் சிவனை வழிப்பட்ட கோவில் - பிரம்மிபூட்டும் ராமநாதர் ஆலயம்!
By : Kathir Webdesk
ஸ்ரீ ராமர் சிவனை வழிப்பட்ட கோவில். சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்ற தலம் அருள்மிகு ராமநாதர் திருக்கோவில் .
தலச்சிறப்பு :
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். சுவாமிக்கு தீபாராதனை செய்யும் போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 140 வது தேவாரத்தலம் ஆகும்.
தல வரலாறு :
ராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளி இருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய முயன்றார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பாள் தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக் கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, "ராமநாதேஸ்வரர்" என்று பெயர் பெற்றார்.
அமைவிடம்:
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம் - 609 704, திருவாரூர் மாவட்டம்.
திருவாரூரில் இருந்து 22கிமீ தொலைவிலும் திருப்புகலூர் இருந்து 2கிமீ தொலைவிலும் கோவில் உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகள் திருப்புகலூரில் நிற்கும்.
மகா சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி போன்ற நாட்களில் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.