“நரேந்திர மோடி, பிரதமர் வடிவில் ஒரு பிதா” - கிரண்மேடி பெருமிதம்!!
“நரேந்திர மோடி, பிரதமர் வடிவில் ஒரு பிதா” - கிரண்மேடி பெருமிதம்!!
By : Kathir Webdesk
சந்திரயான்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்ப வந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். உடனே பிரதமர் மோடி அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.
இந்த வீடியோ இந்திய மக்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. பார்க்கும் போதெல்லாம், நம்மை கண்கலங்க வைக்கிறது.
அதைவிட சிவனுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு தந்தையாகவே உணரப்பட்டார். உண்மையான ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி நடந்துகொண்டார் என்று அனைவரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “எங்கே, எப்போது ஒரு தவைனின் தேவை மிக முக்கியமாகிறோ, அப்போதுதான் அந்த உண்மையான தலைவனை புரிந்துகொள்கிறார்கள். நரேந்திர மோடி, நமக்கு கிடைத்த ஒரு அரிய பிரதமர். இதன் மூலம் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வடிவில் ஒரு பிதா அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் பிரதமர் நரேந்திர மோடி, சிவனை கட்டி தழுவிய வீடியோவையும் இணைத்துள்ளார்.