தேசியக் கல்விக் கொள்கை 2020.. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதி..
ஊட்டச்சத்துடன் கூடிய கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்.
By : Bharathi Latha
ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்காக புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில் ‘ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி' என்ற திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மே 12-ஆம் தேதி தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய ஸ்மிருதி இரானி, தேசியக் கல்விக் கொள்கை 2020-இல் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக இருக்கிறது என்று கூறினார்.
ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பணிக்குழு மற்றும் தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மாநில அரசுகள், நிபுணர்கள், பெற்றோர் முதலியோருடன் நடைபெற்ற விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் பணிக்குழு பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.
குழந்தைகளின் அடிப்படை வளர்ச்சியில் பொம்மைகள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறிய அமைச்சர், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் மரம், துணி, மண் போன்று எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொம்மைகள் பற்றி பேசினார். இது போன்ற தயாரிப்புகளால் அங்கன்வாடி மையங்கள், தேசிய பொம்மைகள் செயல் திட்டத்தின் கீழ் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Input & Image courtesy: News