காஷ்மீர் தலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றப்பட்டு பட்டொளி வீசி பறக்கும் தேசிய கொடி !
காஷ்மீர் தலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றப்பட்டு பட்டொளி வீசி பறக்கும் தேசிய கொடி !
By : Kathir Webdesk
காஷ்மீருக்கான 370 பிரிவு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநில தலைமை செயலகத்தில் பறக்க விடப்பட்ட அம்மாநில கொடி அகற்றப்பட்டது. தேசிய கொடி மட்டும் பறக்க விடப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தின் படி, தேசியக்கொடியுடன், அம்மாநில தனிக்கொடியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து தற்போது, ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலகத்தில் பறந்த மாநில கொடியை அதிகாரிகள் அகற்றினர். கடந்த வாரம் வரை தலைமை செயலகத்தில், தேசிய கொடியும், காஷ்மீர் மாநில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன.
இது குறித்து அங்கு இருக்கும் அதிகாரிகள் தெரிவித்தது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், காஷ்மீர் மாநில கொடி அகற்றப்பட்டு, தேசிய கொடி பறக்கவிடப்படும் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.