Kathir News
Begin typing your search above and press return to search.

நவராத்திரி இன்று 8-ஆம் நாள்: பக்தர்களின் அனைத்து தடைகளையும் நீக்க வருகிறாள் கவுரி அவதாரத்தில் ஸ்ரீ துர்கா தேவி!

நவராத்திரி இன்று 8-ஆம் நாள்: பக்தர்களின் அனைத்து தடைகளையும் நீக்க வருகிறாள் கவுரி அவதாரத்தில் ஸ்ரீ துர்கா தேவி!

நவராத்திரி இன்று 8-ஆம் நாள்: பக்தர்களின் அனைத்து தடைகளையும் நீக்க வருகிறாள் கவுரி அவதாரத்தில் ஸ்ரீ துர்கா தேவி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Oct 2019 3:44 PM IST


துர்கா தேவியின் அவதாரங்களில் மகா கவுரி அவதாரம் அழகான வசீகரிக்கும் தோற்றமாகும். நான்கு கைகளைக் கொண்ட அவளின் வலதுபுற ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கையில் அபயமுத்திரையும், இடது கை ஒன்றில் தாமரை மலரும், மற்றொரு கையில் உடுக்கை மேளமும் கொண்டுள்ளாள். அவள் வெள்ளை ஆடைகளை அணிந்து ஒரு காளையின் மீது அமர்ந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.


மா கல்ராத்திரி எனப்படும் மூர்க்கமான தனது சாமுண்டி அவதாரத்தில் பேய்களை அழித்தபின், மிகவும் கருப்பாகவும், உடலெங்கும் ரத்தக்கறையாகவும் இருந்த அவளது நிறத்தை பார்த்து அவள் ‘கிண்டல் செய்யப்பட்டாள்’ என்று புராணம் கூறுகிறது. எனவே அவள் தனது அழகிய நிறத்தை திரும்பக் கோரி பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தாள். பிரம்மா இமயமலையில் மானசரோவர் ஆற்றில் குளிக்கச் சொன்னார். அவளும் அவ்வாறு செய்ய அவள் மீண்டும் தனது முந்தைய நிறத்தையும், அழகையும் பெற்றதாகவும், அந்த அழகிய வடிவத்தில்தான் மஹா கவுரி என அழைக்கப்பட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.


நவராத்திரிகளில் அஷ்டமி மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும், இன்றைய நாளில் பலர் இளம்பெண்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்து ஹல்வா, பூரி மற்றும் சனாவை வழங்குவது வழக்கமாகும்.


நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மா துர்காவின் ஒன்பது அவதாரங்களில் ஒன்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஷைலாபுத்ரி, பிரம்மச்சாரினி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, கத்யாயினி, கல்ராத்திரி, மகா கவுரி மற்றும் சித்திதத்ரி ஆகிய ஒன்பது வெவ்வேறு வடிவங்கள் ஆகும். இன்றைய ஏழாம் நாளில் காளை மீதமர்ந்து கவுரி அவதாரத்தில் பக்தர்களின் அனைத்து விதமான தடைகளையும் அகற்ற நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம்.


This is a translated from OpIndia.Com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News