மோடி அரசு நக்சல்களை விரைவில் வேரோடு அழிக்கும் -அமித்ஷா!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நக்சல்களை நாட்டில் இருந்து கூடிய விரைவில் வேரோடு அகற்றும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
By : Karthiga
சதீஷ்கரின் பஸ்தர் பகுதியின் காங்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 29 மாவோயிஸ்டுகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் வரலாற்றில் ஒரே மோதலில் அதிகபட்ச நக்சல்கள் உயிரிழந்தது இம்முறையே ஆகும்.
துப்பாக்கி சண்டையில் மூன்று பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து பெரும் அளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட செய்தி குறிப்பில் பயங்கரவாதம் மற்றும் நக்சல்களுக்கு எதிராக மத்திய அரசு இடைவிடாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் .பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மிகக் குறுகிய காலத்தில் நக்சல்களை நம் தேசத்தில் இருந்து வேரோடு அகற்றுவோம் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
சதீஷ்கரில் பாஜக ஆட்சி அமைந்த கடந்த மூன்று மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட நக்சல்கள் உயிரிழந்தனர். 125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளனர். பாதுகாப்பு வெற்றிடத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 2014 ஆம் ஆண்டு முதல் மாவீரர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான பாதுகாப்பு படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டு முதல் மட்டும் 250 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
SOURCE :Dinamani