Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் 2022-23 தேர்ச்சி சதவீதமும் - அமைச்சரின் பதிலும்

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி குறைவு.அதற்கு அமைச்சர் தந்த பதில்

நீட் 2022-23 தேர்ச்சி சதவீதமும் - அமைச்சரின் பதிலும்

KarthigaBy : Karthiga

  |  10 Sep 2022 6:15 AM GMT

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தமிழகத்தின் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைவு.ஜூலை 17ஆம் தேதி நடந்த 2022-23 ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் 7ஆம் தேதி வெளியாகின. இந்தாண்டு மொத்தம் 18.72 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 17.64 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வை எழுதினர். இதில் மொத்தம் 9.93 பேர் தேர்ச்சி பெற்றனர்; 7.71 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை.மாணவியர் அதிகம்


இந்தாண்டு மொத்தம் 8.07லட்சம் மாணவர்களும்; 10.64 லட்சம் மாணவிகளும்; 11 மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பித்தனர். அதில் 7.63 லட்சம் மாணவர்களும்; 10.01 மாணவிகளும் மற்றும் 11 மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வை எழுதினர்.


இதில் 5.63 லட்சம் மாணவிகள்; 4.29 லட்சம் மாணவர்கள் மற்றும் 7 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத்தை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம், அதாவது 56.78 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தேர்ச்சி:

இந்தாண்டு தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா, 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 30-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஹரிணி என்ற மாணவி, 702 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 43-வது இடத்தை பிடித்துள்ளார்.

தமிழக விவரம்:

தமிழகத்திலிருந்து இந்தாண்டு 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.32 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 64,380 பேர் தேர்ச்சி பெறவில்லை. அதாவது 51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 99,610 பேர் தேர்வை எழுதி 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் 57 ஆகும். இந்தாண்டில் சுமார் 6 சதவீதம் குறைவு.

அமைச்சரின் பதில்:

நேற்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், "தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகம் என்பதால் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது" என கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News