Kathir News
Begin typing your search above and press return to search.

நேரு செய்த வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது! காஷ்மீருக்கு தனி அந்தஸ்த்து ரத்து! இன்று நடந்த அதிரடி நிகழ்வுகள்!!

நேரு செய்த வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது! காஷ்மீருக்கு தனி அந்தஸ்த்து ரத்து! இன்று நடந்த அதிரடி நிகழ்வுகள்!!

நேரு செய்த வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது! காஷ்மீருக்கு தனி அந்தஸ்த்து ரத்து! இன்று நடந்த அதிரடி நிகழ்வுகள்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2019 6:14 AM GMT



காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்


வழக்கத்தை விட காஷ்மீரில் துணை ராணுவப்படை குவிப்பு


ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது


காஷ்மீர் விவகாரம் தொடர்பான எதிர்கட்சிகளின் நோட்டீஸ் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது


காஷ்மீர் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் பிரச்சனை எழுப்பினார்


காஷ்மீர் பதற்றம் குறித்து உள்துறை அமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வலியுறுத்தல்


காஷ்மீர் தொடர்பான மசோதாவை அமித்ஷா அறிமுகம் செய்ய உள்ளார் - வெங்கய்யா நாயுடு


மசோதாவை அறிமுகம் செய்த பிறகு காஷ்மீர் பதற்றம் குறித்து விவாதிக்கலாம் - வெங்கய்யா நாயுடு


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா - குலாம் நபி ஆசாத் வாக்குவாதம்


முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்படுவதாக எதிர்கட்சிகள் புகார்


மசோதா அறிமுகம் மட்டுமே செய்யப்படுகிறது - எம்பிக்கள் படித்துப்பார்க்க அவகாசம் கொடுத்து பிறகு நிறைவேற்றப்படும் -வெங்கய்யா நாயுடு


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்க அரசு விரும்புகிறது


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது பிரிவை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படும் - அமித்ஷா


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பை தொடர்ந்து மாநிலங்களவையில் கடும் அமளி


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு - அமித்ஷா


சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் காஷ்மீரின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றி அமைக்க முடியும்.


சிறப்பு அந்தஸ்தின் மூலம் காஷ்மீரின் நிரந்தர குடிமக்களை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே தீர்மானிக்க முடியும்


அமித்ஷா அறிவிப்பு மூலம் மிகப்பெரிய வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த நேருவின் தவறை தற்போதைய மோடி அரசு சரி செய்துள்ளது - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி


சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீரில் இந்தியாவின் பிற பகுதி மக்களும் சொத்துகள் வாங்க முடியும்


சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீர் பெண்கள் பிற மாநில ஆண்களை திருமணம் செய்தாலும் சொத்துரிமை கோர முடியும்


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அறிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் அறிவிப்பாணையும் வெளியீடு


குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அறிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் அறிவிப்பாணை வெளியீடு


சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் இனி பொருந்தும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News