நேபாளம்: இந்தியப் பகுதிகளை நேபாள வரைபடத்தில் சேர்க்க ஆட்சேபம் தெரிவித்த நேபாள எம்.பி கட்சியிலிருந்து நீக்கம்? #Nepal #India #SarithaGiri
நேபாளம்: இந்தியப் பகுதிகளை நேபாள வரைபடத்தில் சேர்க்க ஆட்சேபம் தெரிவித்த நேபாள எம்.பி கட்சியிலிருந்து நீக்கம்? #Nepal #India #SarithaGiri

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் சமீபத்தில், இந்தியப் பகுதிகள் சிலவற்றை நேபாளத்துடன் சேர்த்து வரைபடம் வெளியிட்டனர். இதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும், அவை இந்தியப் பகுதிகள் தான் என்றும் உறுதியாகப் பேசிய நேபாளி சமாஜ்பாடிக் கட்சியின் MP சரிதா கிரி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளார்.
சரிதா கிரியை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரை கட்சி பொதுச் செயலாளர் ராம் சஹாய் பிரசாத் யாதவிடமிருந்து வந்துள்ளது. கிரியை சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சி உறுப்பினராகவும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கிரி கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) என்று இதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு முடிவு செய்தது என்று காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.
"நாட்டின் தேசிய வரைபடத்தை திருத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு" ஒருமனதாக ஒப்புதல் அளிக்கும் சமாஜ்பாடி கட்சியின் முடிவை மீறியதற்காக சரிதா கிரி மீது இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது.
அவர் கட்சியின் நிலைப்பாட்டையும் முடிவையும் மீறியது மட்டுமல்லாமல், அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ஒரு திருத்தத்தை செய்ய வேண்டும் என்று நேபாள நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகிய பகுதிகளை நேபாளத்தின் ஒரு பகுதியாக சேர்க்க எந்த ஆதாரமும் இல்லை என்று கிரி வாதிட்டார். இதற்கும் மேல், கிரி தனது திருத்தத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார், மேலும் கட்சி உள்நடவடிக்கை அச்சுறுத்தல்கள் அவரைத் தடுக்கவில்லை.
நேபாளத்தின் சமாஜ்பாடி கட்சி தனது முடிவை நாடாளுமன்ற செயலகத்தில் இன்னும் சமர்ப்பிக்கவில்லை, இந்த முடிவு இன்னும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படவில்லை.
நேபாள அரசாங்கத்தின் வரைபடத் திருத்தம், சீனாவின் செல்வாக்கின் பேரில் நடக்கிறது என்று கிரி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக அமர் உஜாலா தெரிவித்துள்ளது.
இந்தியாவுடனான நேபாளத்தின் உறவுகள் குறித்து அவர், இந்திய மக்களுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளையும் அல்லது சர்ச்சையையும் நேபாள மக்கள் விரும்பவில்லை என்று கூறினார். இந்த விஷயத்தில் சீனா மற்றும் இந்தியாவுடன் நேபாளம் ஒரு உரையாடலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், கலபாணி மற்றும் லிம்பியாதுரா (உத்தரகண்ட்) ஆகியவற்றை நேபாளம் தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாக சேர்ப்பது குறித்து இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
நேபாள பிரதமர் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஓலியின் வலுவான இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டின் மத்தியில் இந்த நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.