இந்த 3 வகை உணவுகளையும் இதைப் பயன்படுத்தி எல்லாம் சமைக்க கூடாதாம் !
Never cook this 3 food in pressure cooker.
By : Bharathi Latha
சமைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் வேலையை எளிதான வழியில் நிமிடத்தில் செய்துவிடலாம். பிரெஷர் குக்கர் சமைப்பவர்களின் வேலையை மிக எளிதாக்கிவிடும். இதனாலேயே அது சமையலறையின் சிறந்த நண்பன் என்று அழைக்கப் படுகிறது. சமைக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் வேலையை எளிதான வழியில் நிமிடத்தில் செய்துவிடலாம். இதனால் வேலை , நேரம் மட்டும் மிச்சமாவதில்லை. சிலிண்டர் அளவையும் கச்சிதமாக பயன்படுத்தலாம். இதனால் பொருளாதார ரீதியாகவும் அது நமக்கு சிறந்த பொருள்தான். இப்படி அதனால் பல நன்மைகள் நமக்கு இருந்தாலும் சில உணவுப் பொருட்களை அதில் வேக வைப்பது தவறு. அது நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
வேலையை எளிதாக முடிக்க வேண்டும் என்பதற்காக பலர் உணவை குக்கரில் தான் அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் அப்படி அரிசியை குக்கரில் வேக வைக்கும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு வகை கெமிக்கல் உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதனால் எண்ணற்ற நோய்களுக்கு வழிவகுக்கும். அதேபோல் அதன் ஸ்ட்ராச் உடலுக்கு நல்லதல்ல. எனவேதான் வேக வைத்து அந்த நீரை வடித்துவிட்டு சாப்பிடுவார்கள். அப்படி நேரடியாக குக்கரில் வேக வைத்து சாப்பிடுவதால் உடல் பருமனால் பாதிக்கப்படலாம். உருளைக் கிழங்கை எப்போதுமே குக்கரில் வேக வைப்பதுதான் பலருடைய வழக்கம். இது சாதாரணமாக தண்ணீரில் போட்டு வேக வைத்தால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.
ஆனால் அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கின்றனர். குக்கரில் வேக வைக்கும்போது அதன் ஸ்டார்ச் நல்லதல்ல என்கின்றனர். இதனால் நீங்கள் புற்றுநோய் முதல் நரம்பியல் கோளாறு என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர். பாஸ்தாவையும் வேலை சுலபம் காரணமாக குக்கரில் வேக வைப்பது ஆபத்து என்கின்றனர். ஏனெனில் அதன் ஸ்டார்ச்சும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே அதை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் கொதிக்க வைத்து வேக வைப்பதே நல்லது.
Input & Image courtesy:herzindagi.