Kathir News
Begin typing your search above and press return to search.

வாட்ஸ் அப்பில் வர இருக்கும் புதிய வசதிகள்

Whatsapp புதிதாக வசதிகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்பில் வர இருக்கும் புதிய வசதிகள்

KarthigaBy : Karthiga

  |  27 Oct 2023 2:45 PM GMT

பறந்து விரிந்த சமூக வலைதள தொகுப்பில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் இன்று யாருமே இருக்க மாட்டார்கள். அப்படி அனைவரது மொபைலிலும் தனக்கான ஆளுமையை பிடித்திருக்கும் ஒரு பிரத்தியேகமான செயலி தான் மெட்டாவின் whatsapp செயலி. பொழுது விடிந்தாலும் பொழுது போனாலும் வாட்ஸ் அப்பில் சாட் செய்யாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ் அப் நிறுவனமும் பல்வேறு வகையான புதிய அப்டேட்களை தந்து கொண்டு தான் இருக்கிறது.


Whatsapp செயலியில் புதிதாக ஒருவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமலேயே நேரடியாக அவருடன் சாட் செய்யும் புதிய அப்டேட்டை தர இருக்கிறது. இப்படி புதிதாக பல சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது whatsapp செயலி. ஒருவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த புதிய அப்டேட் விரைவில் அனைவருமே பயன்படுத்தும் சேவையாக இதுவரை இருக்கிறது.


இது தவிர இன்னொரு வசதியும் வாட்ஸ் அப்பில் வர இருக்கிறது. புகைப்படம் அல்லது வீடியோவை கம்ப்ரஸ் செய்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு அனுப்பும்போது அது சமயத்தில் உடைந்து விடும். தெளிவான புகைப்படத்தையோ வீடியோவையோ காண இயலாது. ஆனால் வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய வசதியால் உடையாத புகைப்படத்தையும் வீடியோவையும் காணமுடியும். எந்த வகையிலும் புகைப்படத்தில் தெளிவு, நிறம் , துல்லியம் ஆகியவை மாறாது. வர இருக்கும் இந்த இரண்டு புதிய வசதிகள் ஆல் whatsapp வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


SOURCE :enews.in



Next Story
கதிர் தொகுப்பு
Trending News