Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய தேசிய கல்விக் கொள்கை: ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்தியா அமோக வளர்ச்சி அடையும் - பிரதமர் மோடி

புதிய தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை: ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்தியா அமோக வளர்ச்சி அடையும் - பிரதமர் மோடி

KarthigaBy : Karthiga

  |  30 July 2023 10:00 AM GMT

புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டதன் மூன்றாவது ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி டெல்லியில் இரண்டு நாள் அகில இந்திய கல்வி மாநாடு நடக்கிறது. பிரகதி மைதானத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகளை விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


புதிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கும் மொழி பிரச்சனையை தங்கள் சுயநலத்துக்காக அரசியல் ஆக்க முயற்சிப்பவர்கள் இதன் மூலம் தங்கள் கடைகளை அடைப்பார்கள். தாய்மொழியில் கல்வி கற்பது இந்தியாவில் மாணவர்களுக்கு ஒரு புதிய நீதியை அறிமுகப்படுத்துகிறது. இது சமூக நீதிக்கான மிக முக்கியமான படியாகும். மாணவர்களின் திறனுக்கு பதிலாக அவர்களது மொழியின் அடிப்படையில் அவர்களை மதிப்பது மிகப்பெரிய அநிதியாகும்.


உலகில் ஏராளமான மொழிகளும் அவற்றுக்கு என சிறப்புகளும் உள்ளன. பல வளர்ந்த மொழி நாடுகள் தங்கள் உள்ளூர் மொழிகள் காரணமாக சிறப்பை பெற்றுள்ளன. ஐரோப்பாவை பொருத்தவரை பல நாடுகள் தங்கள் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துகின்றன. இந்தியாவின் நிறுவப்பட்ட மொழிகள் ஏராளமிருந்தாலும் அவை பின்தங்கிய நிலையின் அறிகுறியாக காட்டப்படுகின்றன. ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.


புதிய தேசிய கல்விக் கொள்கையின் வருகையால் நாடு இப்போது இந்த நம்பிக்கையை தவிர்க்க தொடங்கியுள்ளது. ஐ.நா.வில் கூட நான் இந்திய மொழியில் தான் பேசுகிறேன். ஒரு மொழியில் மாணவர்கள் நம்பிக்கையோடு இருக்கும்போது அவர்களது திறமைகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி வளரும். புதிய சாத்தியங்களின் தோட்டமாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. நமது ஐ.ஐ.டி.களின் வளாகங்களை தங்கள் நாடுகளில் திறக்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன .


அந்த வகையில் தான்சானியா, அபுதாபி நாடுகளில் ஐ.ஐ.டி வளாகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.பல சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தகவல்களை திறப்பதற்கு நம்மை நாடுகின்றன. புதிய கல்விக் கொள்கையானது இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரிடம் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News