Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய வகை கொரோனா பாதிப்பு சீனாவைப் போல் இந்தியாவில் கடுமையாக இருக்காது - மருத்துவ உயர் அதிகாரி!

பி.எப் 7 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு சீனாவைப் போல இந்தியாவில் கடுமையாக இருக்காது என்று மருத்துவ உயரதிகாரி தெரிவித்தார்.

புதிய வகை கொரோனா பாதிப்பு சீனாவைப் போல் இந்தியாவில் கடுமையாக இருக்காது - மருத்துவ உயர் அதிகாரி!
X

KarthigaBy : Karthiga

  |  26 Dec 2022 1:00 PM GMT

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் வினய் கே.சந்திகூரி ஒரு செய்த நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


பொதுவாக உருமாறிய கொரோனாக்கள் அனைத்தும் கவலை அளிக்க கூடியவை தான். அவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்படும். தடுப்பூசி போட்டவர்களை தாக்கும். தாக்கப்பட்டவர்களை கூட தாக்கும்.நாம் டெல்டா என்ற மிக மோசமான கொரோனா அலையை பார்த்து விட்டோம். உடனே தடுப்பூசி போடும் பணியை தொடங்கினோம்.ஒமைக்ரான் வந்தது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். இப்போது வந்துள்ள பி.எஃப் 7என்ற புதிய வகை கொரோனா டெல்டா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த அளவுக்கு நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளோம். மற்ற வைரஸ்களின் தாக்குதலுக்கு ஆளாகி நாம் ஏற்கனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று விட்டோம்.


எனவே இப்போது சீனாவில் ஏற்படுத்தியது போல் இந்தியாவில் பி. எஃப். 7 கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. எல்லா வழிகளிலும் நாம் வேறுபட்டவர்கள். சீனாவில் பூஜ்ஜியக் கொரோனா கொள்கையை பின்பற்றியதுதான் தற்போதைய கொரோனா பரவலுக்கு காரணம். அங்கு தடுப்பூசி குறைவான அளவுக்கு போட்டிருப்பது நோயின் தீவிரத்தை அதிகரித்துவிட்டது. இந்தியாவில் வயதானவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். ஆனால் சீனாவில் அப்படிதடுப்பூசி செலுத்த மக்கள் முன்வரவில்லை.


இந்தியாவில் கொரோனா அலை வரும் என்றோ வராது என்றோ தற்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் உடனே வரும் என்பதற்கான பீதியான அறிகுறி தெரியவில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை தடுப்பூசி சிகிச்சை போன்ற கட்டமைப்பு வசதிகள் தாராளமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News