Kathir News
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் 12 விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்கள் : உத்திர பிரதேசத்தில் ரூபாய் 42000 கோடிக்கு திட்டங்கள்- அசத்திய மோடி அரசு!

உத்தரபிரதேசத்தில் ரூபாய் 42,000 கோடிக்கு திட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் 12 விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்களை மோடி திறந்து வைத்தார்.

நாடு முழுவதும் 12 விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்கள் : உத்திர பிரதேசத்தில் ரூபாய் 42000 கோடிக்கு திட்டங்கள்- அசத்திய மோடி அரசு!

KarthigaBy : Karthiga

  |  10 March 2024 6:08 PM GMT

நாடு முழுவதும் 12 விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று திறந்தார். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று முதல் முதலாக அங்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திலிருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் வரை அவர் ரோட் ஷோ நடத்தினார்.


சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். ஆலயத்துக்கு சென்ற பிறகு காசி விஸ்வநாதருக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் அசம்கர் நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது உத்திர பிரதேச மாநிலத்திற்கான 42,000 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டடினார். மேலும் நாடு முழுவதும் 12 விமான நிலையங்களில் புதிய முனைய கட்டிடங்களை பிரதமர் திறந்து வைத்தார் .


இதில் டெல்லி, குவாலியர், புனே கோலாப்பூர் ,ஜபல்பூர், லக்னோ, அலிகார் ஆசம்கர் ,சித்திரகூட், மொராதாபாத் ஷ்ரவஸ்தி மற்றும் அடம்பூர் ஆகிய விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்கள் அடங்கும். இதன் மூலம் இந்த விமான நிலையங்களில் வருடத்திற்கு சுமார் 6.2 கோடி பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் கடப்பா, ஹூப்ளி மற்றும் பெலகாவி ஆகிய மூன்று விமான நிலையங்களில் புதிய முனைய கட்டுமான பணிக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட 15 விமான நிலைய மேம்பாட்டு திட்டத்திற்கான மொத்த செலவு ஏறத்தாழ ரூபாய் 9,711 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு 70 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.


SOURCE :Makkalkural

Next Story
கதிர் தொகுப்பு
Trending News