Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி துவக்கி வைத்த சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பு!

டிசம்பர் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி துவக்கி வைத்த சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பு!

KarthigaBy : Karthiga

  |  21 Nov 2022 1:30 PM GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.2,467 கோடி மதிப்பீட்டில் 2,20,972 சதுர மீட்டர் பரப்பில் கட்டத திட்டம் இடப்பட்டது. இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்ட பணியில் ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங், நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு முனையம் ஆகியவைகளும் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்க சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்டர்கள், வி.வி. ஐ.பி களுக்கான ஓய்வு இடங்கள், பயணிகள் தங்கும் அறைகள், உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன.


விமான நிலைய முதல் கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் நவீன வசதிகளுடன் கூடிய முதல் கட்ட புதிய முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை அடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை இணைவந்திரி வி.கே.சிங் திறப்பு விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சென்னை விமான நிலைய புதிய நவீனம் நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் சில விளக்கங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.


அவருடன் விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி ஸ்ரீராம் மற்றும் அதிகாரிகளுடன் இருந்தனர். இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடந்து பயன்பாட்டுக்கு வரும். அதன் பிறகு தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News