Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே புதிய ரயில் சேவை - அஸ்வினி வைஷ்ணவ் கூறிய அசத்தல் அப்டேட்

வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே புதிய ரயில் சேவை - அஸ்வினி வைஷ்ணவ் கூறிய அசத்தல் அப்டேட்

KarthigaBy : Karthiga

  |  11 Dec 2022 11:45 AM GMT

தமிழகத்துக்கு முத்தரபிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்ட கால கலாச்சார தொடர்புள்ளது. இந்த பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பரிந்துரை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர் இவர்கள் சிறப்பு ரயில்களில் காசி பிரியா கிரஷ் அயோத்தி உள்ள இடங்களுக்கு அனைத்து செல்லப்பட்டு வருகின்றனர் இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்க காசு சென்றிருக்கும் தமிழக பிரதிநிதிகள் குழுவினரையும் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி விஷ்ணு நேற்று சந்தித்து பேசினார். மேலும் வாரணாசி ரயில் நிலையம் மறு சீரமைப்பு திட்டத்தையும் ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:-


வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்படும். இந்த காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். விமான நிலையங்களின் முனையங்களைப் போல ரயில் நிலையங்களையும் மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பார்வையின் அடிப்படையில் வாரணாசி ரயில் நிலையம் உலகதரத்துடன் மேம்படுத்தப்படும் இந்த ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 7000 கோடி செலவிடப்படும். அடுத்த ஐம்பது ஆண்டுகளை மனதில் வைத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். வாரணாசி ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் செய்யப்படும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News