Kathir News
Begin typing your search above and press return to search.

களைக்கட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பை உறுதி செய்த காவல்துறை

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்.

களைக்கட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பை உறுதி செய்த காவல்துறை

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Jan 2023 5:34 AM GMT

2023 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒரு சூழ்நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தற்போது கலைக்கட்ட ஆரம்பித்து இருக்கிறது. இந்தியாவில் காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை பல்வேறு மாநிலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.


இந்தியா கேட், கேட்வே ஆப் இந்தியா, பாந்த்ரா பகுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத்தில் கண்டு கொண்டாட்டத்தில் தலைநகர் டெல்லிக்கு பல்வேறு முக்கிய இடங்களில் மக்கள் கூட்டமாக புத்தாண்டு கொண்டாடி வரவேற்று இருக்கிறார்கள். டெல்லியில் கன்னாட் பிளேஸ் மற்றும் இந்தியா கேட் முக்கியமாக சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இடங்களில் மக்கள் தற்பொழுது கூட்டமாக கூடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்தாண்டைக் கொண்டாட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நூற்றுக்கணக்கானோர் ராஜ பாதையில் பிறந்ததால் அந்த பகுதி தற்போது பெரும் சுற்றுலாத்தலமாக காட்சி அளித்து இருக்கிறது. மேலும் மக்களின் பாதுகாப்பில் உறுதி செய்வதற்கு நாடு முழுவதும் சுமார் 18,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். இதேபோல் தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் புத்தாண்டு குத்தாட்டங்கள் தற்பொழுது களைக்கட்டி வருகிறது.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News