Kathir News
Begin typing your search above and press return to search.

அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி': இது வெறும் கோஷம் பா.ஜ.க.வின் போராட்டம் - பிரதமர் மோடி

2407-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி: இது வெறும் கோஷம் பா.ஜ.க.வின் போராட்டம் - பிரதமர் மோடி

KarthigaBy : Karthiga

  |  19 Aug 2023 5:15 PM GMT

குஜராத் , மராட்டியம், மத்திய பிரதேசம் கிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பா. ஜனதா உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மாநாடு தாதர் நகர் ஹவேலியில் நடந்தது. அதில் பா ஜனதா தலைவர் நட்டா கலந்து கொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது:-


நான் பிரதமர் ஆனவுடன் ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித் தருவதையும் வங்கி கணக்கு தொடங்குவதையும் முன்னுரிமை கொடுத்து செய்தேன். அதுபோல் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்கள் கிராம மற்றும் மாவட்டத்திற்கு சில பணிகளை எடுத்து செய்ய வேண்டும். மக்கள் ஆதரவுடன் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். பா.ஜனதா மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆண்டுதோறும் மூன்று திட்டங்களை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே நிதி ஒரு பிரச்சனையே அல்ல. ரூபாய் 70,000 கோடியாக இருந்த உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு தற்போது 3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.


30,000 மாவட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டித் தந்துள்ளோம். அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பது பா. ஜனதாவுக்கு வெறும் கோஷம் அல்ல. அதனுடன் ஒவ்வொரு தருணமும் வாழ வேண்டும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க திட்டமிட்டுள்ளோம்.


ஒவ்வொரு கிராமம், தாலுக்கா, மாவட்டம் ஆகியவற்றை வளர்ச்சி அடைய செய்தால்தான் இதை சாதிக்க முடியும். வளர்ச்சி திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். கைவினை தொழிலாளர்களுக்காக 'விஸ்வகர்மா திட்டம்' செப்டம்பர் 17- ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்படுகிறது.பா. ஜனதா உள்ளாட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள கைவினை தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பலனடைய உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News