பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா.. பிரதமர் மோடி அரசாங்கத்திற்கு கிடைத்த பாராட்டு..
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு (WRB) மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் தார்மீக தைரியம் மோடி அரசுக்கு மட்டுமே உள்ளது. இது அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி அரசுக்கு வாழ்த்துகள்" என்று பல அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
வளர்ச்சி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் கூறும் போது, “மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை. மத்திய அமைச்சரவையின் அறிக்கையின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் மசோதாவின் விவரங்களுக்கு காத்திருக்கிறோம். சிறப்புக் கூட்டத்திற்கு முன் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இது குறித்து நன்றாக விவாதிக்கப்பட உள்ளது" என்று கூறினார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்றால் என்ன? அரசியலமைப்பு 108வது திருத்த மசோதா, 2008, மாநில சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள மொத்த இடங்களின் மூன்றில் ஒரு பங்கை (33%) பெண்களுக்கு ஒதுக்க முயற்சி செய்து வருகிறது. இந்த மசோதா 33% ஒதுக்கீட்டிற்குள் SC, ST மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டை முன்மொழிகிறது. இதில் சுமார் 27 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது லோக்சபாவில் இப்போது 15% குறைவான பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பல மாநிலச் சட்டசபைகளில் நிலைமை இதை விட மோசம். அங்கெல்லாம் 10%க்கும் குறைவான பெண்களே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதுவே பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் தீர்மானம் தேவை என்பதை வலியுறுத்துகிறது.
Input & Image courtesy: News